செய்திகள்

இயக்குனர் கவுதம் மேனனை காமெடி நடிகர் மதுரை முத்து மீம் போட்டு கலாய்த்துள்ளார் | Comedy Actor Madurai Muthu has made fun of director Gautham Menon

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் மற்றும் ரொமான்டிக் இயக்குநராக வலம் வரும் கவுதம் மேனன்.

Comedy Actor Madurai Muthu has made fun of director Gautham Menon

வார வாரம் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகிறதோ இல்லையோ கவுதம் மேனன் இருக்கும் படங்கள் வெளியாகிறது என்றே ஏகப்பட்ட மீம்கள் சுற்றி வருகின்றன. இந்நிலையில், இந்த வாரம் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள பத்து தல படத்தில் அரசியல்வாதியாக மிரட்ட காத்திருக்கிறார் கவுதம் மேனன்.

Comedy Actor Madurai Muthu has made fun of director Gautham Menon

ஒரு பக்கம் சிம்புவின் பத்து தல படத்தில் கவுதம் மேனன் வில்லனாக நடித்துள்ள நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி நடித்துள்ள விடுதலை படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் கவுதம் மேனன் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார். இந்த வாரம் கவுதம் மேனன் vs கவுதம் மேனன் போட்டி நிலவுவதால் தான் தற்போது ஏகப்பட்ட மீம்கள் குவிந்து வருகின்றன.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் லியோ படத்தில் ஏகப்பட்ட வில்லன்கள் உள்ளதாக கூறுகின்றனர். அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின் உள்ளிட்ட பிரபலங்களுடன் சேர்ந்து இயக்குநர் கவுதம் மேனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கவுதம் மேனன் குறித்த மீம் ஒன்றை மதுரை முத்து பதிவிட்டு சமூக வலைதள ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார்.

அது என்ன படம்.. ஏன் என்ன கூப்டல என கவுதம் மேனன் முறைத்து நிற்க.. மதுரை முத்து.. ஏங்க.. படம் எடுக்குறது பாம்புங்க என மீம் போட்டு சின்னத்திரை காமெடி நடிகர் மதுரை முத்துவும் ஒரு மீம் போட்டு கவுதம் மேனனை கலாய்த்திருக்கிறார்.

Similar Posts