செய்திகள்

படத்திற்காக இவ்வளவு பெரிய ரிஸ்க்கா, காமெடி நடிகர் சூரி..!(Comedy actor Soori Such a big risk for the film)

முன்னணி நடிகளுக்கும் நண்பனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சூரி.தற்போது வெற்றிமாறனின் இயக்கத்தில் விடுதலை என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் சூரி போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்து வருவது குறித்து முன்னதாக போஸ்டரை வெளியிட்டு இருந்தது படக்குழு.

இந்த படத்திற்காக சிக்ஸ்பேக் உள்ளிட்ட உடல் மாற்றங்களை கடுமையான முயற்சியின் மூலம் ஏற்படுத்தியுள்ள சூரி, தற்போது ஜாக்கிசான் அளவிற்கு பறந்து பறந்து சண்டை செய்திருந்தது குறித்து ஏற்கனவே நமது ஏசியாநெட் இணையதளத்தில் செய்தி வெளியாகி இருந்தது.

தற்போது அவ்வாறு அவர் சண்டை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விபத்திற்கு உள்ளாகியுள்ளார். இதனால் கை மற்றும் கால்களில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இருந்தும் சற்றும் அசராத சூரி மருத்துவமனைக்கு சென்று திரும்பிய உடனேயே உடனேயே படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.

தனது நாயகன் இடத்தை தக்க வைத்துக்கொள்ள சூரி இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்து இருப்பது குறித்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

Comedy actor Soori

Similar Posts