வீட்டு வாடகைக்கு கூட பணமில்லை, அழுத கூல் சுரேஸ்..!(Cool Sures cried for no money even for house rent)
தமிழில் பல படங்களில், குணச்சித்திர வேடத்திலும், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளவர் கூல் சுரேஷ்.
சமீபத்தில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை, தியேட்டருக்கு வந்து பார்த்து விட்டு காரில் செல்ல முற்பட்டபோது, ரசிகர்கள் சிலர் அவரை பார்க்க முண்டியடித்ததால், கூல் சுரேஷின் கார் கண்ணாடி உடைந்தது.
மனம் நொந்த கூல் சுரேஷ் மிகவும் ஆதங்கத்தோடு வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் நான் உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன்…. உங்களை சிரிக்க வைக்க தானே முயற்சி செய்கிறேன் என கண் கலங்கி அழுதுள்ளார். சினிமாவிற்கு வந்து 25 வருடங்கள் ஆகிறது. பட வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் கூறியுள்ளார்.
வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாமலும், வண்டிக்கு டியூ கூட கட்டமுடியாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.இனி எந்த படத்திற்கும் விமர்சனமும் செய்ய மாட்டேன் என இவர் அழுதுகொண்டே வீடியோவில் பேசியுள்ளது பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது. தற்போது சிம்பு கூல் சுரேஷுக்கு தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
