செய்திகள்

காசேதான் கடவுளடா திரைபப்படத்தை வெளியிட நீதி மன்றம் தடை உத்தரவு | Court bans the release of Kasethan Kadavulada movie

நடிகர் யோகிபாபு நடித்த காசேதான் கடவுளடா திரைபப்படத்தை தற்போது வெளியிடமாட்டோம் என தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இயக்கிய ஆர் கண்ணன் இயக்கத்தில் உருவாகி உள் ள திரைப்படம் காசேதான் கடவுளடா. இப்படத்தில், மிர்ச்சி சிவா, யோகி பாபு, பிரியா ஆனந்த், கருணாகரன், ஊர்வசி, ஷிவாங்கி, புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜ் பிரதாப் இசையில் பிரசன்னா குமார் ஒளிப்பதிவில், நாதன் சூர்யா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Court bans the release of Kasethan Kadavulada movie

கடந்த 1972 ஆம் ஆண்டு வெளியான காசேதான் கடவுளடா திரைப்படத்தில் முத்துராமன், தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோரமா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நகைச்சுவை திரைப்படமான இப்படம் தற்போது அதே பெயரில் ரீமேக்காசி உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு சில காரணங்களால், திரைப்படம் மார்ச் 3ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னை திருவான்மியூரை சேர்ந்த ராம் பிரசாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தான் தயாரிப்பாளர் மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் சென்னை திநகரை சேர்ந்த ராஜ்மோகன் என்பவர் தன்னை அணுகி காசேதான் கடவுளடா திரைப்படத்தை எடுக்க ரூபாய் 1கோடியே 75லட்சம் கொடுப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கடந்த 2021 ஆம் ஆண்டு போடப்பட்டதாகவும்.

அந்த ஒப்பந்தத்தின் படி திரைபடத்தை தியேட்டரில் வெளியிடுவதற்கு முன்பு தன்னிடமிருந்து வாங்கிய பணத்தை திருப்பி அளிப்பதாகவும் ராஜ்மோகன் உறுதி அளித்திருந்தார். அதன் அடிப்படையில் 1 கோடி 75 லட்சம் ரூபாயை பல்வேறு தவணை மூலமாக அவருக்கு கொடுத்தேன். ஆனால், இந்த ஒப்பந்தத்தை மீறி OTT மற்றும் திரையரங்குகளில் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும், இதனால் தனக்கு பெரிய நிதி இழப்பு ஏற்படும் என்பதால், காசேதான் கடவுளடா திரைப்படத்தை தியேட்டரில் வெளியிட இடைகாலதடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு விசாரணை வந்த போது எதிர்மனுதாரரான ராஜ்மோகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரருக்கு ஒப்பந்தத்தின் படி குறிப்பிட்ட பணத்தை செலுத்தப்பட்டுள்ளதாகவும் மீதி பணத்தை கொடுக்கும் வரை வெளியிட விட மாட்டோம் என நீதிமன்றத்தில் உத்திரவாதம் அளிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை மார்ச் 2ம்தேதி ஒத்திவைக்கபட்டது.

Similar Posts