செய்திகள் | திரை விமர்சனம்

கஸ்டடி திரைப்படத்தின் திரைவிமர்சனம் | Custody Movie Review

Custody Movie Review

இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா, க்ரித்தி ஷெட்டி சரத்குமார், அரவிந்த்சாமி, பிரியாமணி, சம்பத், பிரேம்ஜி அமரன் என பலரும் நடித்துள்ளனர் கஸ்டடி திரைப்படம் எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம்.

படக்குழு

இயக்கம்:

வெங்கட் பிரபு

தயாரிப்பு:

சீனிவாச சித்தூரி

வெளியீடு:

ஸ்ரீநிவாசா வெள்ளித்திரை
அஜ்னி இண்டஸ்ட்ரீஸ்

முக்கிய கதாபாத்திரங்கள்:

நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, சரத்குமார், அரவிந்த்சாமி, பிரியாமணி, சம்பத், பிரேம்ஜி அமரன்

இசை:

யுவன் சங்கர் ராஜா
இளையராஜா

படத்தின் கதை

90களில் ஆந்திராவில் நடக்கும் கதையாக இது அமைந்திருக்கின்றது. அந்தவகையில் ராஜமுந்திரியில் நடக்கும் வெடி விபத்து ஒன்றில் பள்ளி குழந்தைகள் உட்பட பலரும் கொல்லப்படுகின்றனர். இதனையடுத்து இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்படுகிறது.

Custody Movie Review

மறுபுறம் சின்சியரான போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கிறார் சிவா (நாக சைதன்யா).  அதே ஊரை சேர்ந்த கீர்த்தி ஷெட்டியை காதலித்து வருகிறார், ஆனால் கீர்த்தியின் குடும்பத்தினர் இதை விரும்பாமல் வேறு ஒரு பையனுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கின்றனர்.

Custody Movie Review

இந்நிலையில் மிகப்பெரிய ரௌடியாக இருக்கும் அரவிந்த்சாமி சி.பி.ஐ. அதிகாரியாக வரும் சம்பத்திடம் பிடிபடுகிறார். அப்போது நடக்கும் கார் விபத்து ஒன்றின் போது இருவரும் போலீசில் எதிர்பாராத விதமாக சிக்குகின்றனர். இதன் பின்னர் சிறையில் இருக்கும் அரவிந்த்சாமியை காப்பாற்ற முதலமைச்சர் பிரியாமணி, போலீஸ் உயரதிகாரி சரத்குமார் உட்பட அதிகார வர்க்கத்தினர் பாலாறும் முயற்சிக்கின்றனர்.

போலிஸ் சம்பத்தை கொல்ல முயற்சித்து அரவிந்த் சாமியை காப்பாற்ற வர, நாக சைதன்யா எல்லோரையும் அடித்து அங்கிருந்து இருவரையும் தன் கட்டுப்பாட்டில் எடுக்கிறார்.

இதே நேரத்தில் வீட்டை விட்டு கீர்த்தி ஷெட்டியும் ஓடி வர, நாக சைதன்யா என்ன செய்தார், அரவிந்த் சாமி யார் எதற்காக அரசாங்கமே அவரை காப்பாற்ற நினைக்கிறது என்பது மீதிக்கதை.

படத்தின் சிறப்பு

பின்னணி இசை பக்கபலமாக அமைந்துள்ளது.

நேர்மையான காவலராக நாக சைதன்யாவின் நடிப்பு அபாரமானது மற்றும் படம் முழுக்க ஆக்‌ஷன் நகர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அரவிந்த் சாமி, சரத்குமார் நடிப்பில் மிரட்ட, பிரியாமணி, ராம்கி, பிரேம்ஜி, சம்பத் ஆகியோர் கொடுத்த கேரக்டர்களை சிறப்பாக செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் சொதப்பல்கள்

படத்தின் முதல் அரை மணி நேரம் தெலுங்கு டப்பிங் படம் பார்க்க வந்து விட்டோமா? என தோன்றும் அளவுக்கு ரசிகர்களின் பொறுமையை பெரிதும் சோதிக்கிறது.

இரண்டாம் பாதி என்ன தான் விறுவிறுப்பான கதையாக சென்றாலும் பல படங்களில் பார்த்த காட்சிகள் டுவிஸ்ட்கள் என்று நம் நினைவிற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

படத்தின் பாடல்கள் பெரும் தொய்வு.

படத்தின் முதல் அரை மணி நேரம்

மதிப்பீடு: 2.25/5

ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.

Similar Posts