மனைவியுடன் முதல் திருமண நாளை கொண்டாடிய டி.இமான் | D.Imman celebrated his first wedding anniversary with his wife.
டி.இமான் 2001ஆம் ஆண்டு தமிழன் திரைப்படத்தில் முதலாவதாக இசையமைத்தவர், மிகக் குறைந்தக் காலத்திலேயே 25 திரைப்படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். பல விருதுகளை பெற்றுள்ள டி.இமான் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிமான் 2008 இல் மோனிகா ரிச்சர்டை மணந்தார், அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் டி.இமான் கடந்த ஆண்டு எமிலியை மறுமணம் செய்து கொண்டார். அவருடன் முதல் திருமண நாளை கொண்டாடிய டி.இமான், அவருடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு மனைவிக்கும் நன்றியும் தெரிவித்துள்ளார்.

அதாவது நாங்கள், ஒருவரையொருவர் அறிந்து ஒரு வருடம் ஆகிறது! அமலி ஒரு மனைவியாக நீங்கள் உண்மையில் குடும்பத்தை மீட்டெடுத்தீர்கள்! என் மூன்றாவது மகள் நேத்ரா, நீங்கள் மிகவும் மகிழ்ச்சியையும் அமைதியையும் சேர்த்திருக்கிறீர்கள்! வாழ்க்கையை அழகாக்கியதற்கு நன்றி!