செய்திகள்

சிம்புவின் கஷ்டங்களை எமோஷ்னலாக கூறிய டி.ராஜேந்தர்..!(D. Rajender told Simbu’s difficulties emotionally)

வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகவுள்ளது. இதில் முதல் பாகம் வெளியாகவுள்ள நிலையில் சிம்புவின் தந்தையும், பிரபல இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர் இப்படத்தை பற்றி பேசியுள்ளார். அவர் பேசியதாவது, 

இப்படத்தில் ஒரு 20 வயது இளைஞனாக சிம்பு நடிப்பாரா என்ற சந்தேகம் அவருக்கு முதலில் இருந்தது. எனவே இதற்காக சிம்பு தன் உடலை வருத்தி எடையை குறைத்து இக்கதாபாத்திரத்திற்காக போட்டோஷூட் எடுத்து அப்புகைப்படத்தை ஜெயமோகனிடம் காண்பித்தார்.

அதை பார்த்த ஜெயமோகன் சிம்பு 18 வயது தக்க இளைஞனாக மாறிவிட்டார் என கூறி பாராட்டினார்.இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற இறைவனை வேண்டி கொள்வது மட்டுமல்லாமல், ஊடக துறையான உங்களின் ஆதரவும் வேண்டும் என்று கூறியுள்ளார் டி.ராஜேந்தர்.

D. Rajender and Actor simbu

Similar Posts