சின்னத்திரை

டான்ஸ் ஜோடி டான்ஸில் தெரிவுசெய்யப்பட்ட ஜோடிகள்..!

டான்ஸ் ஜோடி டான்ஸ் என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியாகும், அங்கு சாமானியர்கள் சாதனையாளர்களாக மாற்றப்படுகிறார்கள்.

கிகி மற்றும் மிர்ச்சி விஜய் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் புதிய சீசனில் சினேகா, பாபா பாஸ்கர் மாஸ்டர், சங்கீதா மற்றும் பிற நடுவர்கள் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள 12 போட்டியாளர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

  1. புவி – வைஷ்ணவி
  2. ப்ரீதா – டொமினிக்
  3. சரவணா – ஸ்ரீநிதி
  4. பிரிட்டோ – அகிலா
  5. ஜென்மோனி – ஆனந்த்
  6. சுகி விஜய் – நம்ரைதா
  7. கென்னி – சாய் காயத்ரி
  8. நாகராஜ் – பிரணிகா

மீதமுள்ள 4 போட்டியாளர்களுடன் ஜோடி போடப்போகும் பிரபலங்கள் யார் என்பது அடுத்த வாரம் தெரிய வரும்.

இதுவரை ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன்களில் பங்கேற்ற பல போட்டியாளர்கள் இன்று சின்னத்திரையில் பிரபலங்களாக ஜொலித்து வரும் நிலையில் இந்த சீசனிலும் நிறைய பிரபலங்கள் உருவாக்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.

Similar Posts