விவாகரத்தை பற்றி முதன்முதலாக மனம் திறந்த டிடி..!(DD is the first to open up about divorce)
விஜே அர்ச்சனா தனது youtube மூலமாக நவராத்திரிக்கு புது நிகழ்ச்சி ஒன்றை துவங்கி உள்ளார். இதில் முதல் ஆளாக வந்திருப்பது திவ்யதர்ஷினி. இந்த வீடியோ சமீபத்தில் வெளியானது.
அதில் டிடி தனது சொந்த வாழ்க்கை தொடர்பான பல விஷயங்களை பேசி இருந்தார். இவரின் விவாகரத்து தொடர்பாக முதன்முதலாக கூறியிருந்தார். அந்த வீடியோவில் சின்ன வயதில் நான் எனது தந்தையை இழந்தேன். அப்போது நான் மனம் உடைந்து போனேன்.
காபி வித் டிடி நிகழ்ச்சியில் தான் என் விவாகரத்து தகவல் எனக்கு கிடைத்தது. ரம்யா கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார்.
நான் நிகழ்ச்சிக்கான முதலீடை சொல்ல இருந்த சமயம் எனது முன்னாள் கணவர் நமக்குள் இது சரிவராது விவாகரத்து செய்து கொள்ளலாம் என்று கூறினார். எனக்கு தான் இதனால் அதிக பாதிப்பு. அந்த சமயமே நான் தைரியமாக அந்த நிகழ்ச்சியை எடுத்து முடித்தேன்.
