செய்திகள்

உருவப்படங்கள் வைத்து எரிக்கப்பட்ட தீபிகா படுகோன், ஷாருக்கான்..!(Deepika Padukone and Shah Rukh Khan burnt with effigies)

‘பதான்’ இந்தி படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே ஜோடியாக நடித்துள்ளனர். இந்த நிலையில் பதான் படத்தில் இடம்பெற்றுள்ள தீபிகா படுகோனேவின் கவர்ச்சி குத்தாட்ட பாடல் காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பாடலில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே காவி உடையில் கவர்ச்சி நடனம் ஆடி இந்துக்கள் மனதை புண்படுத்தி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

வீர சிவாஜி அமைப்பை சேர்ந்தவர்கள் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பதான் படத்தை தடை செய்யும்படி கோஷமிட்டு தீபிகா படுகோனே, ஷாருக்கான் ஆகியோரின் கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கொடும்பாவியை செருப்பால் அடிப்பது போன்ற வீடியோவையும் வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர்.

இதனால் படத்துக்கு தடைவிதிக்கப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Deepika Padukone and Shah Rukh Khan

Similar Posts