செய்திகள் | திரை விமர்சனம்

தெய்வ மச்சான் திரைப்படத்தின் திரைவிமர்சனம் | Deiva Machan Movie Review

Deiva Machan Movie Review

இயக்குனர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் விமல், நேஹா ஜிஹா, பால சரவணன், அனிதா சம்பத் என பல நட்சத்திரங்கள் நடிப்பில் ரிலீஸ் ஆகி உள்ள  தெய்வ மச்சான் திரைப்படம் எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம்.

படக்குழு

இயக்கம்:

மார்ட்டின் நிர்மல் குமார்

தயாரிப்பு:

உதய குமார்
கீதா உதயகுமார்
எம்.பி.வீரமணி

வெளியீடு:

உதய் புரொடக்ஷன்ஸ்
மேஜிக் டச் பிக்சர்ஸ்

முக்கிய கதாபாத்திரங்கள்:

விமல், பாண்டியராஜன்
நேஹா ஜா, அனிதா சம்பத், பால சரவணன், ஆடுகளம் நரேன்

இசை:

அஜேஷ்

படத்தின் கதை

இயக்குனர் மார்ட்டின் நிர்மல் குமார், ஒரு திருமணத்தை கதையாக எடுத்து, திருமண விழா முதல் மறுவீடு வரை அனைத்தையும் திரைக்கதையாக எழுதி அதில் நடக்கும் விஷயங்களை திகட்டாமல் மிகவும் இயல்பாக சொல்லி இருக்கும் கதையே தெய்வ மச்சான்.

Deiva Machan Movie Review

விமலின் கனவில் வரும் சில விஷயங்கள் நிகழ் காலத்தில் அப்படியே நடக்கிறது. இதனால் ஒரு பக்கம் கதி கலங்கி போய் இருக்கிறார் கதையின் நாயகன் விமல் மறுபுறம் இவரின் தங்கையான அனிதா சம்பத்திற்கு அடுத்தடுத்து கல்யாணம் தடை பட்டு போகிறது.

Deiva Machan Movie Review

இதனால் மனம் நொந்து குடும்பமே உட்கார்ந்து இருக்கும் நிலையில்தான் நல்ல சம்பந்தம் ஒன்று தேடி வருகிறது. ஆனால் விமலின் கனவில் தங்கச்சி புருஷன் மச்சான் இரண்டு நாட்களில் இறந்து விடுவார் என்கிற பகீர் குண்டு வந்து விழுகிறது. இறுதியாக விமலின் மச்சான் என்ன ஆனார்,அவரை காப்பாற்றும் விமலின் முயற்சி என்ன ஆனது உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே படத்தின் மீதி கதை!

படத்தின் சிறப்பு

தெய்வ மச்சான். விமலுக்கே உரித்தான சாமானிய கிராம இளைஞனாக கதாபாத்திரம். கதாபாத்திரத்தில் நன்றாகவே பொருந்தி இருக்கிறார்.

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் பால சரவணனின் காமெடிகள் ரசிக்கும் படி இருக்கிறது.

தங்கையாக அனிதா சம்பந் கதாபாத்திரத்திற்கு நன்றாகவே நியாயம் செய்து இருக்கிறார்.

விஜய் டிவி தீபா காமெடிகள் சிரிப்பு சரவெடி

படத்தின் சொதப்பல்கள்

பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை

திரைக்கதையில் சற்று தொய்வு நிலை

முதல் பாதியை விட இரண்டாம் பாதி நீளமாக இருப்பது படத்திற்கு பின்னடைவு.

மதிப்பீடு: 3/5

கலகலப்பு திரைப்படத்திற்கு பிறகு விமலுக்கு அமைந்த நல்ல நகைசுவை திரைப்படம் தெய்வ மச்சான்.

ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.

Similar Posts