செய்திகள்

வில்லன் மற்றும் நடிகர் என மிரட்டலாக தனுஸ்..!

தனுஷ் நடிப்பில் அடுத்ததாக உருவாகி உள்ள படம் நானே வருவேன். செல்வராகவன் இயக்கியுள்ள இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார்.

இதில் நடிகர் தனுஷ் ஹீரோ மற்றும் வில்லன் என இரட்டை வேடங்களில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர இயக்குனர் செல்வராகவனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். 

 நானே வருவேன் படத்தின் மாஸான இரண்டு போஸ்டர்களை வெளியிட்டு ரிலீஸ் குறித்த முக்கிய தகவலையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படத்தை செப்டம்பர் 30-ந் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Similar Posts