நடிகர் சிவராஜ் குமாருடன் இணைந்து ஐபிஎல் தொடரை கண்டுகளித்த தனுஷ் | Dhanush discovered the IPL along with actor Shiva Rajkumar
நடிகர் தனுஷ் நடிப்பில், சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் ‘கேப்டன் மில்லர்’ படத்தினை தயாரிக்கிறது. ‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தினை இயக்குகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி முதல் தென்காசி மாவட்டத்தில் துவங்கியது. இந்த படப்பிடிப்பில் தனுஷ், ஜான் கொக்கன் கலந்து கொண்டனர்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக பிரத்யேக போஸ்டருடன் படக்குழு அண்மையில் அறிவித்தது. இந்நிலையில் நடிகர் சிவராஜ்குமாருடன் இணைந்து ஐபிஎல் தொடரை கண்டுகளித்த புகைப்படம் வைரலாகி வருகின்றன.