செய்திகள் | திரை விமர்சனம்

அருள்நிதியின் டைரி திரைவிமர்சனம்

அருள்நிதியின் நடிப்பில் இன்னாச்சி பாண்டியன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் டைரி படம் எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம்

படக்குழு

இயக்கம்:

இன்னாசி பாண்டியன்

தயாரிப்பு:

எஸ். கதிரேசன்

வெளியீடு:

ரெட் ஜெயண்ட்

முக்கிய கதாபாத்திரங்கள்:

அருள்நிதி, கிஷோர் குமார் ஜி., வி.எஸ். ஜெயபிரகாஷ் மற்றும் பவித்ரா மாரிமுத்து

இசை:

ரான் எதன் யோகன்

படத்தின் கதை

தொடர்ந்து திரில்லர் படங்களாக மற்றும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களையே தேர்ந்தெடுத்து அதில் மட்டும் நடித்து வருகிறார் அருள்நிதி அந்த வகையில் அருள்நிதியின் நடிப்பில் வெளியாய் இருக்கும் டைரி திரைப்படமும் ஒரு திரில்லர் திரைப்படம் தான் என்று ஏற்கனவே தெரிந்த தகவல்தான். பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்துள்ள டைரி படம் போட்டதும் எப்பொழுதும் திரில்லர் படங்கள் எப்படி தொடங்குமோ அதுபோல் இந்த படமும் தொடங்குகிறது. படத்தில் வரும் குற்றங்களை யார் செய்தது ? என்ன நடந்தது ? எப்படி நடந்தது ? இதுபோன்று படத்தில் வரும் கேள்விகள் நம்மளையும் படத்தின் ஓட்டத்தின் கூடவே நம்மளையும் கொண்டு செல்ல துவங்குகின்றது . படத்தில் அருள்நிதி நடிப்பில் எவ்வித குறையும் சொல்ல முடியாத அளவிற்கு நடிப்பில் தொம்சம் செய்திருக்கிறார் . இருந்தாலும் கதையில் பவித்ரா, ஷாரா போன்றவர்களின் கதாபாத்திரங்களுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் ஒன்றும் கொடுக்கவில்லை, எதற்கு இவர்கள் இருக்கின்றன என தோன்றி இருந்தாலும். அவ்வப்போது வந்து செல்கின்றன இந்த கதாபாத்திரங்கள்

இந்த படத்தில் ஊட்டியில் காவல் ஆய்வாளராக பணியில் சேரும் அருள்நிதிக்கு வழக்கம் போல் போலீஸ் படங்களில் புதிதாக சேரும் நபர்களுக்கு பழைய கேஸ் ஒன்றை எடுத்துக் கொடுப்பார்கள் அதுபோல் நம் அருள்நிதிக்கும் 16 வருட பழைய கேஸ் பைல் ஒன்று தருகிறார்கள். ஆனால் அருள்நிதி அந்த கேஸ்சை பின் தொடரும் போது அந்த கேஸ் பற்றி பல ஆச்சரியப்படுத்தும் உண்மை தகவல்கள் வெளி வருகின்றனர். திரில்லர் படங்களில் முதலில் இருந்து பட முடியும் வரை இந்த தவறை அவர் செய்திருப்பாரோ இல்லை இவர் செய்திருப்பாரோ என்றபடி ஒவ்வொரு நபரையும் நாமே சந்தேகித்து இவர் செய்திருக்கலாம் என்று எண்ணும்படி வைப்பார்கள் ஆனால் முடிவு யாரும் நினைக்காத படி இருக்கும் ஆனால் டைரி படத்தில் அந்த மாதிரியான கதைப்போக்கு இல்லாதது வருத்தமளிக்கிறது. இருந்தாலும் படம் பார்ப்பவர்களுக்கு புதியதாக ஒரு படம் பார்த்த அனுபவத்தை கொடுக்கிறது.

படத்தின் சிறப்பு

 திரில்லர் படங்களாக தேர்ந்தெடுத்து பார்க்கும் நபர்களுக்கு இந்த படம் ட்ரீட். இசை படம் பார்ப்பவர்களை படத்துடன் பயணிப்பதற்கு மிக உதவியாக இருக்கிறது. அருள்நிதியின் நடிப்பு படத்துக்கு படம் மெருகேறிக் கொண்டே போகிறது. ரான் எதன் யோகனின் இசையில் உருவாகி உள்ள மூன்று பாடல்கள் கேட்கவும் பார்க்கவும் அழகாக இருப்பது சிறப்பு.

படத்தின் சொதப்பல்கள்

சிஜெ வேலைபாடுகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ஷாரா டபுள் மீனிங் ஜோக் அடித்து சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார். ஆனால், அதெல்லாம் சரியாக அமையவில்லை. போலீஸ் அதிகாரியாக வரும் புதுமுக நடிகர்கள் பெரிதாக நடிப்பு திறமையை வெளிப்படுத்த தவறி விட்ட்டார்கள்

மதிப்பீடு: 2.75/5

ஒரு தடவை தியேட்டர் சென்று படத்தை பார்க்கலாம்.

ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.

Similar Posts