விஜய் 68ல் இருந்து அட்லீ விலகினாரா? | Did Atlee withdraw from Vijay 68?
ஷங்கரிடம் உதவி இயக்குனராக எந்திரன் மற்றும் நண்பன் திரைப்படத்தில் பணியாற்றி பின்னர் 2013-ம் ஆண்டு வெளிவந்த ராஜா ராணி திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக திரைத்துறையில் அறிமுகமானவர் தான் இயக்குனர் அட்லீ.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து மூன்று படங்களை இயக்கிய அட்லீ, தற்போது பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.

அந்த படத்தை முடித்த பிறகு மீண்டும் விஜய்யை வைத்து அட்லீ படம் இயக்குவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், விஜய் 68 படத்தை அட்லீ இயக்கப் போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.அட்லீ மீண்டும் ஒரு ஹிந்தி படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஹீரோவாக பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கவுள்ளார்.