செய்திகள்

சூப்பர் ஸ்டாரே ஏஜென்ட் டீனாவ கூப்பிட்டாரா..இனி வேற லெவல்!

உலகநாயகன் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் என முன்னணி நடிகர்கள் நடித்திருந்தாலும் இவர்களைத் தாண்டி பேசப்பட்ட கதாபாத்திரம் ஏஜென்ட் டீனா. இவர் ஆரம்பத்தில் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் இடம்பெற்ற பாடல்களில் குரூப் டான்ஸராக நடனமாடி உள்ளார்.

விக்ரம் படத்தில் வேலைக்காரி வள்ளியம்மாவாக இருந்து ஏஜென்ட் டீனாவாக மாறும் காட்சிகள் பிரமாதமாக அமைந்திருந்தது.

மேலும் சண்டை காட்சிகளிலும் அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் மலையாள படம் ஒன்றில் தற்போது வசந்தி ஒப்பந்தமாகியுள்ளார்.

மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர் உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் மலையாளப் படத்தில் வசந்தி நடிக்கவுள்ளார்

மேலும் விக்ரம் படத்தை போல இந்தப் படத்திலும் இவருடைய கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும் என கூறப்படுகிறது. ஒரு டான்ஸராக திரைத் துறையில் நுழைந்து கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் தற்போது நடிகையாக வசந்திக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

Similar Posts