செய்திகள்

இயக்குனரும் நடிகருமான மனோபாலா காலமானார். | Director and actor Manobala passed away.

மனோபாலா எனும் மகா நடிகன்: 1953ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி நாகர்கோயிலில் பிறந்த மனோபாலா 1979ம் ஆண்டு புதிய வார்ப்புகள் படத்தில் உதவி இயக்குநராக பாரதிராஜாவிடம் வேலை செய்த நிலையில் ஒரு சிறிய காட்சியில் நடிகராகவும் தோன்றினார்.

அதன் பின்னர் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த மனோபாலா நகைச்சுவை நடிகராக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து அசத்தினார்.

வடிவேலு, சந்தானம், விவேக் என பல முன்னணி நடிகர்களுடன் காமெடி காட்சிகளில் இணைந்து நடித்து பட்டையை கிளப்பிய மனோபாலாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் தமிழ் சினிமாவில் உள்ளனர். அவரது ஒல்லியான பாடியும் அதை வைத்து அவர் செய்யும் பாடி லேங்குவேஜும் ரசிகர்களை பார்த்தமாத்திரத்திலேயே சிரிக்க வைத்துவிடும்.

கஜினி, கலகலப்பு, அரண்மனை, தலைவா, காஞ்சனா, பிகில், டான் என பல படங்களில் தனது நகைச்சுவையால் ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார்.

ஏகப்பட்ட தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக கலக்கிய மனோபாலாவிற்கு வயது 69. கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நடிகர் மனோபாலா உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது மறைவு ஒட்டுமொத்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்தி உள்ளன.

Similar Posts