திரை உலாவின் தேடலில் இன்றைய திரைப் பிரபலம் – இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன்(Director and Actor Pradeep Ranganathan)

வெற்றிப்படம் கோமாளியை தந்து அதன் பின் லவ் டுடே படத்தில் நடித்ததன் மூலம் இளைஞர்களின் மனதில் நிற்பவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்..
நடிகராவதற்கு முன்பு
பிரதீப் ரங்கநாதன் நடுத்தர குடும்பத்தில் ஜூலை 25, 1993 இல் இந்தியாவில் தமிழ்நாடு, சென்னையில் பிறந்தார். அவர் ஒரு எழுத்தாளர் மற்றும் இயக்குனர்.இவர் தனது பள்ளிப்படிப்புக்காக தனியார் பள்ளியில் படித்து வந்தார். அவர் தனது இளங்கலை பட்டப்படிப்புக்காக ஸ்ரீ சிவசுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரியில் தன்னைச் சேர்த்துக்கொண்டார்.
ஐடி தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அவர் தனது சொந்த ஊரில் தங்கியிருந்து இயக்குநராக தனது வாழ்க்கையை உருவாக்கினார்.
வீடியோக்களில்

பேஸ்புக்கில் கிளட்ச் வெளியீட்டு பிரச்சனை, பூஜை அட்டூழியங்கள் ஆயுதம், தீபாவளி அட்டூழியங்கள் 1 மற்றும் தீபாவளி அட்ராசிட்டிகள் 2 ஆகிய வீடியோக்களை உருவாக்கியுள்ளார். பல விருதுகளையும் பாராட்டுகளையும் வென்ற அவரது சில குறும்படங்களிலும் நடித்தார்.
தயாரித்து நடித்த குறும்படங்களில்
அவர் வாட்ஸ்அப் காதல், காலேஜ் டைரிஸ், டிவி கதை மற்றும் ஆப்(அ) லாக் போன்ற பல்வேறு வைரலான குறும்படங்களை உருவாக்கியுள்ளார்,
வாட்ஸ்அப் காதல்
படிக்கும் நேரத்திலேயே குறும்படங்கள் எழுதுவதை விரும்பிய இவர் முதலாவதாக கதை எழுதி தயாரித்து நடித்த குறும் திரைப்படம் வாட்ஸாப் காதல்.. இது 2014 ஆம் ஆண்டு உருவாகியதாகும். Whatsapp Kadhal காதலில் புதிய போக்கை சித்தரிக்கும் தமிழ் குறும்படம். இது ஒரு பையன் ஒரு பெண்ணுக்கான காதல் வாட்சப்பில் நகர்வதே கதை. இது யூடியூப்பில் 3.3 மில்லியன் அளவு பார்வையை கடந்துள்ளது. மற்றும் அதிக ரீச்சை பெற்றது.

காலேஜ் டைரிஸ்
முதல் குறும்படத்திலேயே ரசிகர்களிடம் நல்ல ஆதரவை பெற்றார். அதனைத் தொடர்ந்து கல்லூரி டைரிகள் ( 2016 )என்ற குறும்படத்தை எழுதினார். இதிலும் அவரே தயாரிப்பாளர் மற்றும் நடிகர். அந்த கதை கல்லூரி நாட்கள் மற்றும் கல்லூரி காதல் போன்ற கதைகளைக்கொண்டது. இத்திரைப்படமும் யூடியூப்பில் 2.6 மில்லியனை கடந்தது.

அதனைத் தொடர்ந்து ஹைவே காதலி குறும்படத்தில் நடிகராக மட்டும் பணியாற்றிருந்தார். தொடர்ந்து அப் லொக் என்ற கதையை எழுதி நடித்தாராம்.


விருது பெற்ற தமிழ் குறும்படத்தில்
2020ல் சண்முகம் சலூன் பல விருதுகளை வென்ற பைலட் திரைப்படமாகும், இது மழைக்கால ஞாயிற்றுக்கிழமையில் முடிதிருத்தும் ஒருவருக்கும் அவரது வழக்கமான வாடிக்கையாளருக்கும் இடையிலான உரையாடலைப் பற்றியது, இது இந்த நவீன சமுதாயத்தில் மனிதர்களின் இருத்தலியல் நெருக்கடியைப் பற்றி பேசுகிறது.

அறிமுக இயக்குனராக கோமாளியில்
இப்படி குறும்படங்களை எடுத்தாலும் பெரிதாக பட வாய்ப்புக்கள் எதுவும் கிடைக்கவில்லை. இருந்தாலும் தேடலை விடவில்லை. அவரது தேடலின் பிரதிபலனாக ஐசரி கே. கணேஷ் தயாரிப்பாளர். அவரிடம் கோமாளி என்ற படத்தின் கதையை கூற அவருக்கு அதைப் பிடித்து விட்டது. அக்கதையை நடிகர் ஜெயம்ரவியிடம் கூறி நடிக்க சம்மதத்தை வேண்டினாராம் தயாரிப்பாளர். 2017ல் தொடங்கப்பட்டது படம்
2019ல் வெளிவந்தது தான் கோமாளி திரைப்படம். ஜெயம்ரவி, கோமா நோயாளியாக தனது வாழ்நாளில் 16 வருடங்களைத் தவறவிட்டு, புதிய மேம்பட்ட உலகத்திற்கு ஏற்பப் போராடுகிறார். படம் ஏகமனதாக நேர்மறையான விமர்சனப் பதிலைப் பெற்று வெற்றிகரமான முயற்சியாக 50 கோடி வசூல் செய்தது.

படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது இயக்குனர் பிரதீப்பிற்கு. அதுமட்டுமன்றி அவரின் திரையுலகில் அறிமுகப்படமே இதுவாகும் சிறுவர்கள் முதல் அனைவருக்கும் பிடித்த திரைப்படமாகுமாம். இப்படத்தின் ரிவ்யூவை இவரே தியேட்டரில் எடுத்தார். இப்படம் சைமா விருதையும் பெற்றது. இப்படத்தில் இறுதிக் கட்டத்தில் ஆட்டோ ஓட்டுனராக வந்து பிரசவத்திற்கு எப்பவும் இலவசம் தான் என கூறும் காட்சி மூலம் பிரபலமாகியிருப்பார்.
நடிகராக
கோமாளியின் புகழைத்தொடர்ந்து அவரே இயக்கி நடித்த திரைப்படம் வெளியாகி வசூலில் மட்டுமன்றி அனைவரிடமும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. அதுதான் 2022 உருவான தமிழ் மொழி காதல் நகைச்சுவை நாடகத் திரைப்படம் லவ் டுடே. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் அவர்களே (அவரது நடிப்பு அறிமுகத்தில்), இவானா, ரவீனா ரவி, யோகி பாபு மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அது மட்டுமன்றி இது பிரதீப் ரங்கநாதனின் சொந்த குறும்படமான App(a) Lock இன் தழுவல் ஆகும்.

லவ் டுடே திரைப்படம் 4 நவம்பர் 2022 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ₹5 கோடி பட்ஜெட்டில் ₹70 கோடி வசூல் செய்து விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றியடைந்தது மற்றும் 2022 இல் அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் ஒன்றாக ஆனது. அது மட்டுமன்றி இன்னும் வசூலைக் குவித்துக்கொண்டுதான் இருக்கிறது.
இந்தப்படத்தின் கதை என்னவென்றால் காதலிக்கும் இருவர் தனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தில் பழகிவரும்போது தந்தைக்கு தெரிய வர மொபைல்கள் மாற்றப்பட்டு பல தகவல்களால் இருவரும் மாறி மாறி அவர்களின் குற்றுகளை தெரிந்து கொள்கிறார்கள். இறுதியில் ஒரு பெரிய பிரச்சனையில் நடிகை மாட்டிக்கொள்ள அதிலிருந்து விடுபட்டு நம்பிக்கை என்ற கருவை வலுவாகக் கொண்டு சேர்கிறார்கள். இக்கதையை இயக்குனர் பிரதீப் இந்த காலத்திற்கு ஏற்றாற்போல் அமைத்து அதிகம் இளைஞர்களை கவர்ந்து விட்டார் எனலாம்.
விருதுகள்

சிறந்த அறிமுக இயக்குனர் #எடிசன் விருதுகள், சிறந்த அறிமுக இயக்குனர் -SIIMA விருதுகள் 2021 கோமாளி திரைப்படத்திற்காக பெற்றார். லவ் டுடே திரைப்படத்திற்கும் விருகளை பெற வாய்ப்புள்ளது.

திரையுலகிற்கு அறிமுகமாகி இயக்குனர் மற்றும் நடிகராக சினிமாவில் வளர்ந்து வரும் பிரதீப் ரங்கநாதன் தமிழ்த் திரை உலகில் மென் மேலும் பல சாதனைகள் புரிந்து வெற்றி நடை போட திரை உலா சார்பாக வாழ்த்துகிறோம்.