செய்திகள் | திரைப்பிரபலங்கள்

திரை உலாவின் தேடலில் இன்றைய திரைப் பிரபலம் ‍‍‍‍‍– இயக்குனர் லோகேஷ் கனகராஜ்..!(Director and writer Lokesh kanagaraj)

Director and writer Lokesh kanagaraj

இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என தமிழ் சினிமா துறையில் வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இயக்குனராவதற்கு முன்பு

Director and writer Lokesh kanagaraj
Director and writer Lokesh kanagaraj

லோகேஷ் கனகராஜ் மார்ச் மாதம் 14ம் திகதி 1986 ஆம் ஆண்டு இந்தியாவின் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவில் பிறந்தார். அவர் தனது பள்ளிப் படிப்பை கல்லியபுரம் பொள்ளாச்சியில் உள்ள பழனையம்மாள் மெட்ரிக் ஹவர் பள்ளியில் பயின்றார். மற்றும் அவர் PSG கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், MBA படிப்பதற்கு முன்பு பேஷன் டெக்னாலஜியில் தேர்ச்சி பெற்றார். அதனுடன் அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 4-5 ஆண்டுகள் வங்கி ஊழியராக பணிபுரிந்திருந்தார்.

Director and writer Lokesh kanagaraj

கார்ப்பரேட் குறும்படப் போட்டியில் பங்கேற்றதன் மூலம் திரைப்படத் தயாரிப்பில் உள்ள தனது ஆர்வத்தைத் தெரிந்து கொண்டார். அப்போட்டியின் நடுவராக அப்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தான் இருந்தார். அவரது ஆர்வத்தை கண்ட பின் லோகேஷை தொடர்ந்து குறும் படங்களில் இயக்க‌ ஊக்குவித்தார்.

திருமண வாழ்க்கை

செப்டம்பர் 15, 2011 அன்று அவருக்கும் ஐஸ்வர்யா லோகேஷுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பின் கனகராஜ் ஐஸ்வர்யாவை ஜனவரி 8, 2012 இல் திருமணம் செய்து கொண்டார்.அவரது மனைவி லோகேஷ் கனகாராஜின் வெற்றிக்கு ஒரு பெரிய பலமாக இருந்தவர். அவருக்காக வேலைக்கு சென்றாராம். கிட்டதட்ட ஒருவருடத்தில் தம்பதியருக்கு அத்விகா லோகேஷ் என்ற மகளும் ஆருத்ரா லோகேஷ் என்ற மகனும் உள்ளனர். இவர்களது திருமண நாளில் அவரது மகள் பிறந்தாள்.

திரைப்பட வாழ்க்கை

களம் குறும்படம் ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், செல்வ குமார் ஒளிப்பதிவில், பிலோமின்ராஜ் படத்தொகுப்புடன் உருவாகிய ஒரு தமிழ்த் திரைப்படம். இதுவே லோகேஷ் கனகராஜ் முதல் குறும்பட‌ தொகுப்பாகும்.

Director and writer Lokesh kanagaraj
Director and writer Lokesh kanagaraj

இதைப்பார்த்த கார்த்திக் சுப்புராஜ் இக்குறும்படத்தை 2016 இல், கார்த்திக் சுப்புராஜ் தயாரித்த அவியல் திரைப்படத்தில் சேர்த்தார்.

லோகேஷ் முன்பு கார்த்திக் சுப்புராஜின் ஆன்டாலஜி படத் திட்டமான அவியல் (2016) இல் இயக்குனராகப் பணிபுரிந்தார், அதில் அவரது குறும்படமான களம் சேர்க்கப்பட்டது. ஒரு இளைஞன் கிருஷ்ணனின் வாழ்க்கைக் கதை.

Director and writer Lokesh kanagaraj

அல்போன்ஸ் புத்திரன், ஷமீர் சுல்தான், மோஹித் மெஹ்ரா, லோகேஷ் கனகராஜ் மற்றும் குரு ஸ்மரன் ஆகியோரால் இயக்கப்பட்ட நான்கு குறும்படங்களின் தொகுப்பே இதுவாகும்.

அறிமுக திரைப்படத்தில்

நிவின் பாலி, பாபி சிம்ஹா, அம்ருதா சீனிவாசன், ராஜீவ் கோவிந்த பிள்ளை, அர்ஜுனன், ராமச்சந்திரன் துரைராஜ் மற்றும் தீபக் பரமேஷ் ஆகியோர் குறும்படங்களில் நடித்திருந்தனர்.

Director and writer Lokesh kanagaraj

அதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு மாநகரம் என்ற ஆக்‌ஷன்-த்ரில்லர் படத்தை எழுதி இயக்கியதன் மூலம் திரையில் அறிமுகமாகினார். இத்திரைப்படத்தில் ஸ்ரீ, சுந்தீப் கிஷன் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் நடித்திருந்தனர். படம் 46 நாட்களுக்குள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டது.

Director and writer Lokesh kanagaraj

இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வணிகரீதியாக வெற்றி பெற்றது. இத்திரைப்படத்திற்காக‌ ரஜினிகாந்த் மற்றும் சூர்யா உட்பட பல தமிழ்த் திரையுலகப் பிரமுகர்கள் இந்தப் படத்திற்காக தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தனர். சிறந்த அறிமுக இயக்குனர் என்ற விருதைப் பெற்ற படம் இதுவாகும்.

வெப் சீரிஸ் எழுத்தாளராக‌

Director and writer Lokesh kanagaraj

2018 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ், வெள்ளராஜா வெப் சீரிஸில் இணை எழுத்தாளராகப் பணியாற்றினார். இது தமிழ் மொழி நாடக த்ரில்லர் வலைத் தொடராகும்.இதில் பாபி சிம்ஹா, பார்வதி நாயர் மற்றும் காயத்ரி ஆகியோர் தங்கள் வலைத் தொடரில் நடித்தனர்.

கைதியால் சிறக்க‌

லோகேஷ் ஆரம்பத்தில் மாநகரம் (2017) வெற்றிக்குப் பிறகு 2019 ஆம் ஆண்டு வெளியான தமிழ் அதிரடி திரில்லர் திரைப்படமான கைதி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இயக்கியது மட்டுமல்லாமல் இந்த கதையை எழுதியும் இருந்தார்.

Director and writer Lokesh kanagaraj

இப்படத்தில் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர்களுடன் நரேன், அர்ஜுன் தாஸ், ஹரிஷ் உத்தமன், ஜார்ஜ் மரியன் மற்றும் தீனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான ஒரு கைதி பற்றிய படமாகும். இப்படத்தில் மூலம் அர்ஜீன் தாஸும் பெரிதாக பிரபலமானார்.

படப்பிடிப்பு பகல் காட்சிகள் எதுவும் இல்லாமல், முழுக்க முழுக்க இரவில் படமாக்கப்பட்டது. இது விமர்சனப் பாராட்டைப் பெற்றது. படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது, ₹155 கோடிக்கு மேல் வசூலித்தது. லோகேஷ் இயக்கிய விக்ரம் படத்திலும் கதை தொடர்ந்து வருகிறது, இரண்டு படங்களும் திட்டமிடப்பட்ட லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் (LCU) ஒரு பகுதியாகும், அத்துடன் கைதி 2 என்ற தலைப்பிலான தொடர்ச்சியும் உருவாகி வருகிறது.

Director and writer Lokesh kanagaraj

ஆகஸ்ட் 2020 இல் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழா டொராண்டோவில் (IIFFT) அதிகாரப்பூர்வ திரையிடலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இப்படம் முறையே இரண்டு ஆனந்த விகடன், மூன்று நார்வே தமிழ் திரைப்பட விழா, SIIMA மற்றும் நான்கு Zee சினி விருதுகளை வென்றது.

மொத்தத்தில் இயக்குனர் லோகேஷை தூக்கிவிட்ட படம் இந்த கைதியாகும். காரணம் அவரது கதைக்களம்.

பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தில்

இந்த வெற்றிக்கு பின் லோகேஷ் கனகராஜ் எழுதிய ஒரு ஸ்கிரிப்டை மே 2019 இல் விஜய்யிடம் விவரித்தார், அவர் ஏற்றுக்கொண்ட பிறகு, ஆகஸ்ட் 2019 இல் படம் தொடங்கப்பட்டது. அந்த படம் தான் மாஸ்டர்.

Director and writer Lokesh kanagaraj

மாஸ்டரில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதியுடன் மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ், ஆண்ட்ரியா ஜெர்மியா, அர்ஜுன் தாஸ் மற்றும் கௌரி ஜி. கிஷன் ஆகியோர் மற்ற துணை வேடங்களில் நடித்திருந்தனர்.

Director and writer Lokesh kanagaraj

ஜே.டி. என்ற மதுப்பழக்க பேராசிரியர், சிறார் இல்லத்தில் உள்ள பிள்ளைகளுக்காக‌, பவானி என்ற இரக்கமற்ற போதை கும்பலுடன் மோதுவதே கதையாகும். வெளியான நேரத்தில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தைப் பிடித்த முதல் இந்தியத் திரைப்படம் லோகேஷ் கனகராஜின் இந்தப் படமாகும். படம் சுமார் ₹230–300 கோடிகளை வசூலித்தது. படத்தின் இறுதியில் லோகேஷ் தோன்றியிருப்பார்.

அதிக வசூலில்

2022 ல் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியது மற்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்த படம் விக்ரம். இப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் ஆகியோர் நடித்தனர்.

Director and writer Lokesh kanagaraj

சூர்யா ஒரு சிறப்பு தோற்றத்தில் வந்து செல்வார். இந்தத் திரைப்படம் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸில் (LCU) இரண்டாவது கட்டமாக இருக்கிறது. போதைப்பொருள் சிண்டிகேட் குழுவை வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள கதையாகும்.

விக்ரம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது, ₹420 கோடி (US$53 மில்லியன்)–₹500 கோடி (US$63 மில்லியன்) வசூலித்து 2வது அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படமாக மாறியது. கனகராஜை வசூலில் உச்சத்தை அடைய வைத்த படம் விக்ரம் தானாம்.

Director and writer Lokesh kanagaraj

விக்ரம் தமிழ்நாட்டின் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த படமாக உள்ளதால் திரையுலகில் அதிகம் தேடப்படும் இயக்குனர்களில் ஒருவராக லோகேஷ் மாறியுள்ளார்.

எதிர்காலத்தில்

லோகேஷ் கனகராஜ் தனது சொந்த பிரபஞ்சமான LCU ஐ உருவாக்க முயற்சி செய்துக்கொண்டிருக்கிறார், ல் “தளபதி 67 இன் ஒரு பதிப்பு உள்ளது, அதில் கைதி மற்றும் விக்ரம் ஆகியோரின் சில கதாபாத்திரங்கள் உள்ளன.

Director and writer Lokesh kanagaraj

2 கேங்ஸ்டர்கள், ஏஜெண்டுகள் கும்பல், ஒரு கைதி என ஒரு பிரபஞ்சத்தை உருவாக்குவதுதான் லோகேஷ் யோசனை. லோகேஷ் இயக்கத்தில் தளபதி 67, கைதி 2, விக்ரம் 3 மற்றும் பல படங்கள் வரவுள்ளன‌.

இவர் சிங்கப்பூர் சலூன் படத்தில் ஹேமியோ ரோஒலில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பெற்ற விருதுகள்

Director and writer Lokesh kanagaraj

2018 மாநகரம் படத்திற்காக‌ 10வது விஜய் விருதுகள் சிறந்த அறிமுக இயக்குனர் விருதை வென்றார்.
மற்றும் இப்படம் சிறந்த திரைக்கதை விருதிற்காக‌ பரிந்துரைக்கப்பட்டது.

2020 கைதி ஜீ தமிழ் சினிமா விருதுகளில் பிடித்த இயக்குனர் விருதை வென்றார்.

2022 மாஸ்டர் படத்திற்காக தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளால் சிறந்த இயக்குனர் விருதை வென்றுள்ளார்.

Director and writer Lokesh kanagaraj

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ்த் திரை உலகில் மென் மேலும் பல சாதனைகள் புரிந்து வெற்றி நடை போட திரை உலா சார்பாக வாழ்த்துகிறோம்.

Similar Posts