திரைப்பிரபலங்கள் | செய்திகள்

திரை உலாவின் தேடலில் இன்றைய திரைப் பிரபலம் ‍‍‍‍‍– இயக்குனர் அட்லீ (Director Atlee)

Director Atlee

19 வயதிலேயே இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. தன்னுடைய ஸ்டைலை தனது படத்தில் செலுத்தும் ஒரு திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் தான் அட்லீ.

இயக்குனராவதற்கு முன்பு

மதுரையில் செப்டம்பர் 21ஆம் 1986 ஆண்டு பிறந்தார். இவரின் இயற்பெயர் அருண் குமார். தாயின் பெயர் கலைச்செல்வி. தந்தையின் பெயர் விஜயகுமார். இவருக்கு ஒரு சகோதரியும் உள்ளார். பிரிட்டிஷ் நாட்டின் தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவரும்,அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான “கிளமென்ட் அட்லீ”யின் ஞாபக அர்த்தமாக அவரது பெரியப்பா வைத்த செல்லப் பெயர் அட்லீ.

Director Atlee

இவர் சத்தியபாமா பல்கலைகழகத்தில் இளங்கலை விஸ்காம் படித்து முடித்தார் . அருண் குமார் என்ற பெயரில் நிறைய பேர் இருப்பார்கள் உன்னை அட்லீ என்றே அறிமுகப்படுத்திக்கொள் என்ற தன் தாயின் அறிவுறுத்தலின்படி, தன் முதல் குறும்படத்திலிருந்து தன்னை அட்லீ என்றே அறிமுகம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் குவாலிட்டி கன்ட்ரோலின் எஞ்சினியராக கடமை புரிந்தார்.

குறும்படங்களில்

அட்லீயின் முதல் குறும்படமான “என் மேல் விழுந்த மழைத் துளி” தேசிய அளவில் இரண்டு விருதுகள் வாங்கிட அட்லீ என்ற பெயர் நிலைத்துவிட்டது.

இதன் பின்னர் சிவகார்த்திகேயன், சதீஷ் ஆகியோரை வைத்து முகபுத்தகம் என்ற குறும்படத்தை இயக்கினார். இந்த படம் பெரிய வரவேற்பைக் கொடுத்தது. அதன் பின்னர் இயக்குனர் ஷங்கரிடம் அஷிஸ்டன்டாக சேர ஆசைப்பட்டு அவரிடம் தனது குறும்படத்தை காட்ட பார்த்து பிடித்து போன இயக்குனர் அட்லீயை உதவி இயக்குனராக சேர்த்துக் கொண்டார். இது தான் அவர் வாழ்க்கையின் திருப்புமுனை .

Director Atlee

உதவி இயக்குனராக‌

அட்லீ தனது 19வது வயதில், எந்திரன் (2010) மற்றும் 3 இடியட்ஸ் ஹிந்தி படத்தின் ரீமேக்கான நண்பன் (2012) ஆகிய படங்களுக்கு கதை எழுதி உதவி இயக்குனராக பணிபுரிந்தார் அட்லீ. அப்போது ஷங்கர் சொல்ல சொல்ல அட்லீ தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் எழுதினார்.

Director Atlee
Director Atlee

இயக்குனராக முதல் படத்தில்

2013 ஆம் ஆண்டில், அட்லீ இயக்குனராக ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராய் திரை உலகிற்கு அறிமுகமானார். ராஜா ராணி, ஒரு காதல் நகைச்சுவைத் திரைப்படம், ஏஆர் முருகதாஸ், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா,சத்யராஜ்,சந்தானம்,சத்யன் என்று முதல் படத்திலேயே பெரிய நட்சத்திர பட்டாளத்தை நேர்த்தியாக கையாண்டிருப்பார். ராஜா ராணி பாக்ஸ் ஆபிஸில் 150 கோடிகளுக்கு மேல் சம்பாதித்தது. மேலும் விஜய் விருதுகளில் இருந்து சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதையும் வென்றார். விமர்சகர்களிடமும் மக்களிடையேயும் பெரும் வரவேற்பை இப்படம் பெற்றது. திரையரங்குகளில் நூறு நாட்கள் ஓடியது.

Director Atlee

திருமண வாழ்க்கையில்

கிருஷ்ண ப்ரியா தமிழ் திரையுலகில் ஒரு சிறிய திரை நடிகை ஆவார், மேலும் அவர் திரைப்படங்களில் இரண்டு நல்ல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவர் சிங்கம் படத்தில் அனுஷ்காவின் சகோதரியாக நடித்தார் மற்றும் வெற்றிகரமான டிவி-சீரியலான கன காணும் காலங்கள் மற்றும் ரியாலிட்டி நடன நிகழ்ச்சியான ஜோடி எண் 1 ஆகியவற்றில் அவரது பாத்திரத்திற்காக மிகவும் பிரபலமானவர்.

Director Atlee

அட்லிக்கு சிவகார்த்திகேயன் நல்ல நண்பர் என்பதால் விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியின் செட்டுகளுக்கும் செல்லும் அட்லீக்கு ப்ரியாவின் நட்பு கிடைத்தது. அதற்கு சிவகார்த்திக்கேயனும் ஒரு காரணம்.

அட்லீயும் பிரியாவும் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு எட்டு வருடங்களாக ஒருவரையொருவர் பழகினர்.இவருக்கும் டிவி நடிகை பிரியாவுக்கும் கடந்த செப்டம்பர் 7ம் 2014 தேதி சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் நிச்சயதார்த்தம் நடந்தது. பின்னர் இருவரும் 2014 நவம்பர் 9இல் திருமணம் செய்து கொண்டனர்.

தளபதியுடன்

Director Atlee

ராஜா ராணியின் வெற்றியைத் தொடர்ந்து, அட்லீ தனது அடுத்த வெற்றித் திரைப் படமான தெறி (2016) திரைப்படத்தை எழுதி இயக்கத் தொடங்கினார். விஜய், சமந்தா,ஏமி ஜாக்சன், மகேந்திரன், பிரபு,மொட்டை ராஜேந்திரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை கொண்டது இப்படம். பாக்ஸ் ஆபிஸில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து, வணிக ரீதியாக வெற்றியடைந்து, 2016 ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ் மற்றும் தென்னிந்தியத் திரைப்படங்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. தெறி படம் அட்லீயை மேலே இன்னும் மக்கள் மத்தியில் உயர்த்தி விட்டது. இப்படத்திகு3 விருதையும் பெற்றார்.

மெர்சல் இயக்குனராக‌

2017 ஆம் ஆண்டில், விஜய் மற்றும் நித்யா மேனன் நடித்த தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் தயாரித்த மெர்சல் திரைப்படத்தை அட்லீ எழுதி இயக்கினார். உலகளவில் 260 கோடிகளுக்கு மேல் வசூலித்து தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக மாறியது. தேவையின் காரணமாக, ஐரோப்பாவின் மிகப்பெரிய திரையரங்கமான கிராண்ட் ரெக்ஸ், பிரான்சில் படம் திரையிடப்பட்டது.

Director Atlee

இப்படம் சீனாவின் ஹைனானில் நடைபெற்ற ஹைனான் சர்வதேச திரைப்பட விழாவிலும், தென் கொரியாவில் நடைபெற்ற புச்சியோன் சர்வதேச அருமையான திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. இப்படத்திற்காக இயக்குனர் அட்லீ பல பாராட்டுக்களையும் பெற்றார். அட்லீயை அதிக விருதுகளால் புகழடையச் செய்த திரைப்படம் இதுவாகும்.

தயாரிப்பாளராக‌

இதனிடயே திரைப்படங்களை தயாரிப்பதிலும் இறங்கினார். 2017 ஆம் ஆண்டில், அட்லீ தனது மனைவி பிரியா அட்லீயுடன் இணைந்து “A for Apple Production” என்ற பெயரில் தங்கள் சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோவுடன் இணைந்து அவர்களின் முதல் படத்தை தயாரித்தனர். அதன் பின்னர் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான சங்கிலி புங்கிலி கதவ தொறே என்ற திகில் நகைச்சுவை படத்தை தயாரித்திருந்தார். இப்படத்தில் ஸ்ரீ திவ்யா மற்றும் சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், ராதா ரவி, ராதிகா சரத்குமார் மற்றும் தம்பி ராமையா ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். இப்படம் ஓரளவுக்கு சுமாராக தான் ஓடியது.

Director Atlee

பிடித்த இயக்குனராக அதிக வசூலில்
உயர்த்திய படத்தில்

தெறி மற்றும் மெர்சல் படங்களுக்குப் பிறகு விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் உருவாகிய‌ மூன்றாவது படம் பிகிலை 2019ல் எழுதி இயக்கினார். இதை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ் கல்பாத்தி எஸ். அகோரம் தயாரித்தார். இப்படத்தில் விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், கதிர் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். பிகில் 2019 ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படமாக உருவானது, அதன் வெளியீட்டில் ₹285–300 கோடி வசூலித்தது, விஜய்யின் வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படமாக கொடுத்தார் இயக்குனர் அட்லீ . பிடித்த இயக்குனர் விருதையும் வென்றார் இப்படம் மூலம்.

Director Atlee

மீண்டும் தயாரிப்பில்

2020 ஆம் ஆண்டில், அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் புரொடக்ஷன்ஸ் தயாரித்த திரைப்படமான அந்தகாரம் வெளிவந்தது, இது வி.விக்னராஜன் எழுதி இயக்கிய சூப்பர்நேச்சுரல் ஹாரர் த்ரில்லர் படமாகும். இத்திரைப்படத்தை ப்ரியா அட்லீ, சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோருடன் அவர்களது பேனர் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கே. பூர்ணச்சந்தரின் O2 பிக்சர்ஸ் ஆகியவற்றின் கீழ் தயாரித்தனர். இப்படத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன் மற்றும் குமார் நடராஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Director Atlee

எதிர்காலத்தில்

அதன் பின்னர் அட்லீ எழுதி இயக்கிய இந்திய இந்தி மொழி விழிப்புணர்வு அதிரடி திரில்லர் திரைப்படம் ஜவான் ஆகும். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சன்யா மல்ஹோத்ரா ஆகியோருடன் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜயையும் ஒரு காட்சியில் கொண்டு வர முயற்சி உள்ளதாம். 2021 படம் எடுக்க தொடங்கிய அட்லீ 2 ஜூன் 2023 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளார். இது அவருக்கு பெரிய வெற்றியைக் கொடுக்கும் என நம்பபடுகிறது.

Director Atlee

அவர் பல படக்கதையின் சர்ச்சைகளில் சிக்கினாலும் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என அவர் எழுதி இயக்கிய அனைத்து திரைப்படமும் அவருக்கு பெரிய வெற்றியையே கொடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் மத்தியிலும் திரையுலகிலும் அட்லீ என்ற அவரது பெயரையும் நிலைநாட்டியுள்ளார்.

நண்பன் மற்றும் பிகில் திரைப்படங்களில் அட்லீ சிறப்பு தோற்றங்களின் தோன்றியுமிருந்தார்.

பெற்ற விருதுகள்

Director Atlee

ராஜா ராணி திரைப்படத்திற்காக சிறந்த உரையாடல் எழுத்தாளராக‌ தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும்(2013) சிறந்த அறிமுக இயக்குனர் எடிசன் விருதையும், சிறந்த அறிமுக இயக்குனர் 8வது விஜய் விருதையும் வென்றார். 8வது விஜய் விருதால் சிறந்த கதை, திரைக்கதை எழுத்தாளருக்கும் ,3வது SIIMA விருதால் சிறந்த அறிமுக இயக்குனருக்கும் பரிந்துரைக்கப்பட்டார்.

தெறிக்காக 2வது IIFA உற்சவத்தில் சிறந்த இயக்குனர் விருதையும், மக்கள் தேர்வு இயக்குநராக‌ பிஹைண்ட்வுட்ஸ் தங்கப் பதக்கத்தையும், சிறந்த இயக்குனராக‌ 6வது SIIMA விருதையும் வென்றார். தென்னிந்திய சிறந்த இயக்குனராக 64வது பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

Director Atlee

மெர்சல் படத்திற்காக‌ ( 2018 )சிறந்த இயக்குனராக எடிசன் விருதையும் , சிறந்த இயக்குனராக 7வது SIIMA விருதையும், சிறந்த இயக்குனராக Techofes விருதையும், பிடித்த இயக்குனராக 10வது விஜய் விருதையும் வென்றார்.

65வது பிலிம்பேர் விருதால் தென்னிந்திய சிறந்த இயக்குனருக்கும், 10வது விஜய் விருதால் சிறந்த உரையாடலுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

இயக்குனர் அட்லீ 19 வயதில் காலடி எடுத்து வைத்து தனது பெயரை நிலைநாட்டியவர் தமிழ்த் திரை உலகில் மென் மேலும் பல சாதனைகள் புரிந்து வெற்றி நடை போட திரை உலா சார்பாக வாழ்த்துகிறோம்.

Similar Posts