செய்திகள்

நடிகரை 7 நாட்கள் நிர்வாணமாக 80 அடி மரத்தில் தொங்க விட்ட இயக்குனர் பாலா..!(Director Bala hung the actor naked from an 80 feet tree for 7 days)

‘அவன் இவன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகரும், இயக்குனருமான, ஜி எம் குமார் பாலா இயக்குனர் பாலா குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

அதாவது இயக்குனர் பாலா இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு ஆரியா மற்றும் விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் அவன் – இவன்.

இதில் ஜமீனாக நடித்திருந்தவர் ஜி எம் குமார். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், ஜி எம் குமாரை வில்லன் நிர்வாணமாக ஓடவிட்டு அடித்து, மரத்தில் தொங்கவிட்ட காட்சிகள் பார்ப்பவர்கள் நெஞ்சங்களையே உருக வைத்தது.

இந்த காட்சி குறித்து தற்போது பேசியுள்ள ஜி எம் குமார் மொத்தம் 14 நாட்கள் நிர்வாணமா, இந்த காட்சியில் நடித்ததாகவும் அதில் 7 நாட்கள் உண்மையிலேயே இயக்குனர் பாலா தன்னை நிர்வாணமாக 80 அடி மரத்தில் தொங்க விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மற்றும் இயக்குனர் பாலா படப்பிடிப்பில் மிகவும் கண்டிப்பானவராக இருந்தாலும், அவர் ஒரு குழந்தை போன்றவர் என இயக்குனர் பாலா குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

Director Bala

Similar Posts