செய்திகள்

இயக்குனர் பாலா செய்த கேவலமான செயல்..!(Director Bala’s despicable act)

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் வணங்கான் திரைப்படத்தை இயக்கி வருகிறார் பாலா. இதனிடையே பிதாமகன் திரைப்பட தயாரிப்பாளர் பாலா மீது ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

பிதாமகன் லாபத்தை கொடுக்கவில்லை. இதனால் இயக்குநர் பாலாஒரு திரைப்படத்தை இயக்கி தருகிறேன் என்று கூறினார். இதனால் 10 லட்சம் ரூபாயை அட்வான்ஸாக வி.ஏ.துரை இயக்குநர் பாலாவுக்கு கொடுத்துள்ளார். 10 ஆண்டுகள் கடந்தும் பாலா இயக்கி கொடுக்கவில்லை .

பணத்தை திருப்பி கொடுங்கள் என்று கேட்டும் அவர் கொடுக்காமல் இருந்திருக்கிறார். இதனால் அந்த தயாரிப்பாளருக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது.

அதன் காரணமாகவே அவர் தற்போது பழங்குடி என்ற ஒரு திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

இதையடுத்து தனது பணத்தை கேட்டு இயக்குநர் பாலா அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.அ்ப்போது பாலாவின் உதவியாளர் அவரை வெளியே துரத்தியதாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த வி.ஏ.துரை அலுவலகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றி அறிந்து வந்த போலீசார் இரு தரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளும் வி.ஏ.துரையிடம் சமாதானம் பேசியுள்ளனர்.

Director Bala

Similar Posts