இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா, புதிய படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆக உள்ளார். | Director Bharathiraja’s son Manoj Bharathiraja is making his directorial debut with a new film.
சமீப காலமாக தொடர்ச்சியாக திரைப்படங்கள் நடித்து வருகிறார் பாரதிராஜா, இளம் இயக்குனர்கள் இயக்கிய பாண்டியநாடு, குரங்கு பொம்மை, ஈஸ்வரன், ராக்கி, கென்னடி கிளப் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ்க்கு தாத்தாவாக ‘சீனியர் திருச்சிற்றம்பலம்’ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் பாரதிராஜா, இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.

இயக்குனர் சுசீந்திரனின் கதை & தயாரிப்பில் மார்கழி திங்கள் படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் இயக்குனர் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவு செய்கிறார். கபிலன் வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.