பொறுப்பை விட சினிமா முக்கியமில்லை என அட்வைஸ் செய்த இயக்குனர் லோகேஷ்..!(Director Lokesh advised that cinema is not more important than responsibility)
நடிகர் அஜித் நடித்த துணிவு படத்தின் முதல் காட்சியை இரவு 1 மணிக்கு திரையிடப்பட்டது. இந்நிலையில் ரோகினி தியேட்டருக்கு படம் பார்க்க சென்ற பரத்குமார் என்ற 19 வயது இளைஞர் லாரி மீது ஏறி டான்ஸ் ஆடியுள்ளார்.
அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த சம்பவத்தை குறித்து பேசியுள்ளார். அதில் அவர் ” ரசிகர்கள் அவர்களுடைய பொறுப்பை உணர்ந்தால் போதும்.
உயிர் போகும் அளவிற்கு சினிமாவில் ஒன்றுமில்லை. திரைப்படத்தை பார்த்து சந்தோசமாக செல்லுங்கள், அது போதும்” என ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.
