செய்திகள்

ஆண்டவருடன் இணையும் இயக்குனர் மணிரத்னம்..!(Director Mani Ratnam joins kamal)

‘விக்ரம்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார் கமல்.கொரோனா, லாக்டவுன் உள்ளிட்ட காரணங்களால் நிறுத்தப்பட்டு தற்போது இதன் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதனையடுத்து கமலின் ‘KH 234’ படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளார். 35 ஆண்டுகளுக்குப் பிறகு இரு பெரும் ஜாம்பவான்கள் இணையவுள்ளனர். இந்தப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

Director Mani Ratnam

இந்நிலையில் ஏழு மாநிலங்களை சேர்ந்த பிரபல நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் பான் இந்தியா படமாக ‘KH 234’ உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பாலிவுட்டில் இருந்து ஷாருக்கான் இந்தப்படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Similar Posts