செய்திகள்

விஜயை இயக்க மீண்டும் ஆவலில் இயக்குனர் மோகன்ராஜா..!(Director Mohanraja is eager to direct Vijay again)

தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் விஜய்யின் படத்தை இயக்க ஆவலாக இருக்கின்றனர். தற்போது இயக்குனர் மோகன் ராஜாவும் விஜய்யை இயக்க ஆர்வம் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய மோகன் ராஜா, இடைப்பட்ட காலத்தில் விஜய்யை இயக்க வாய்ப்பு வந்ததாகவும், அப்போது தன்னிடம் கதை இல்லாததால் அந்த வாய்ப்பு பறிபோனதாகவும் கூறினார்.

மேலும் கொரோனா காலகட்டத்தில் கிட்டத்தட்ட ஏழு கதையை எழுதி வைத்துள்ளாராம் மோகன் ராஜா.அதில் ஒரு கதை விஜய்யை மனதில் கொண்டு எழுதியதாகவும்,

எனக்கு நம்பிக்கை வரும் பொழுது அக்கதையை விஜய்யிடம் கூறுவேன் என்றும் தெரிவித்தார். மேலும் நான் மீண்டும் விஜய்யுடன் இணைவது உறுதி என்றும் கூறியுள்ளார் மோகன் ராஜா.

Actor Vijay and Director Mohanraja

Similar Posts