செய்திகள்

மண்டையை பிய்த்துக் கொண்டு கதை எழுதும் இயக்குனர் செல்வராகவன்..!(Director Selvaraghavan, who writes newstory)

முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ‘பகாசூரன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

மேலும், செல்வராகவன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், அவர் தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், “இதான் மண்டய பிச்சுகிட்டு எழுதுறது” என்று புகைப்படம் ஒன்றை பகிர்ந்து குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவிற்கு சீக்கிரம் ஸ்கிரிப்ட் எழுதி முடியுங்கள் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Director Selvaraghavan

Similar Posts