இயக்குனர் சிவாவின் அதிரடி பதில் | Director Siva’s action response
நடிகர் சூர்யாவின் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில், பாலிவுட்டில் நடிகை திஷா பதானி, மிருணால் தாக்கூர், யோகி பாபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகப்பிரமாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

சூர்யா 42 என அழைக்கப்பட்டு வந்த இப்படத்திற்கு கங்குவா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்பு வெளியானது இணையத்தில் பெரும் புயலை கிளப்பியது. பல கங்குவாவிற்கு அர்த்தம் தெரிந்து கொள்ள கூசூளில் வலைவீசி தேடினார்கள்.

இதையடுத்து, படத்தின் இயக்குனர் கங்குவா என்பதன் அர்த்தத்தை விளக்கி உள்ளார். அதில், கங்குவா என்பது படத்தில் நாயகனின் பெயர் என்றும் கங்கு என்றால் ஃபயர் என்றும் கங்குவா என்றால் பவர் ஆப் ஃபயர் என்று அர்த்தம் என்றும், தமிழ் உள்பட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளதால் அனைத்து மொழிக்கும் பொருத்தமான ஒரு பெயரை தேர்ந்து எடுத்து வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் இப்படம் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கதைக்களம் கொண்ட படமாகும். இப்படம் வெறும் கற்பனை கதை இல்லை, வலிமையான வரலாற்று ஆதாரங்கள் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. எனது கனவு திரைப்படமான இப்படத்தின் மூலம் புதிய ஒரு உலகத்தையே நீங்கள் பார்ப்பீர்கள். அதிக அளவில் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற உள்ளதால், 3டியில் கண்டுகளிக்கும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டு வருகிறது.