செய்திகள் | திரைப்படங்கள்

இயக்குனர் வெங்கட் பிரபு தளபதி 68 குறித்து நெகிழ்ச்சி பதிவு | Director Venkat Prabhu is a very emotional post about Thalapathy 68

விஜய் 68 தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி படத்தை வெங்கட் பிரபு இயக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்க்கு 68ஆவது படமாகவும், ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு 25ஆவது படமாகவும் இது அமைகிறது. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். புதிய கீதை படத்துக்கு பிறகு பல வருடங்கள் கழித்து விஜய் படத்துக்கு யுவன் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

Director Venkat Prabhu is a very emotional post about Thalapathy 68

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதை அடுத்து விஜய் ரசிகர்கள் அதை இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், கனவு நனவானது என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதேபோல் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கும் தனது நன்றியை வெங்கட் பிரபு தெரிவித்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், நீண்ட காலத்துக்கு பிறகு விஜய்யுடன் இணைவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரொம்பவே ஆர்வமாக இருக்கிறேன் என குறிப்பிட்டிருக்கிறார்.

Similar Posts