இயக்குனர் விக்னேஷ் சிவன் மகனுடன் பதிவிட்ட உருக்கமான பதிவு | Director Vignesh Shivan posted emotional post
தமிழ் சினிமாவில் சிம்பு மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருந்த போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தனது பயணத்தை தொடங்கியவர் தான் விக்னேஷ் சிவன். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.

நானும் ரவுடிதான் திரைப்படத்தில் பணிபுரிந்த சமயத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு இடையே காதல் உருவாகி இருந்த சூழலில் சில ஆண்டுகள் காதல் வாழ்க்கைக்கு பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 09 ஆம் தேதி திருமணமும் செய்து கொண்டனர்.

தொடர்ந்து சமீபத்தில் அவர்களுக்கு வாடகை தாயின் மூலம் இரட்டைக் குழந்தையும் பிறந்திருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட வெளியே செல்லும் போது இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதி சென்றிருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் அதிகம் வைரல் ஆகி இருந்தது

இந்த நிலையில், தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு,சில உருக்கமான கருத்துக்களையும் தனது பதிவில் இயக்குனர் விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார்.

“என் குழந்தைகளுடன் எல்லா தருணங்களையும் சுவாசிக்கவும் உணரவும் எனக்கு சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி!.. வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து வலிகளிலும் ஒரு நன்மை இருக்கிறது, பாராட்டும், வெற்றியும் நமக்குக் கற்பிப்பதை விட, அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது!” என குறிப்பிட்டுள்ள விக்னேஷ் சிவன், #Wikki6 என தனது அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கி உள்ளது பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த கடினமான சூழலில் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும், ஆண்டவனுக்கும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார். விக்னேஷ் சிவன் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் அவரது உருக்கமான பதிவு, ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.