ஏமாந்த ராஷ்மிகா மந்தனா, கரன் ஜோகர் தான் காரணம்..!
தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும் பிஸியான நடிகை ராஷ்மிகா மந்தனா.தற்போது விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக டைகர் ஷெராஃப்புடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கவிருந்த ராஷ்மிகா. இப்படத்தை கரண் ஜோகர் தயாரிப்பதாக இருந்தது.
தொடர் ஹிந்தி படங்களின் தோல்வி காரணமாக இப்படத்தை கரண் ஜோகர் ட்ராப் செய்துவிட்டாராம். பட்ஜெட் அதிகம் என்ற ஒரே காரணத்தினால் தான் இப்படத்தை நிறுத்திவிட்டாராம் கரண் ஜோகர்.
இப்படத்தின் அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நடிகை ராஷ்மிகாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.