சின்னத்திரை

கண்ணம்மாவின் அணைப்பால் பாரதி கண்ணம்மா சீரியல் முடிகிறதா..?(Does Bharathi Kanamma serial end because of Kanamma’s hug?

900 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது பாரதி கண்ணம்மா சீரியல். தற்போது வெளியாகி இருக்கும் அடுத்த வார ப்ரோமோவில் ஹாஸ்பிடலுக்கு புகுந்து அதிரடி படையினர் எல்லோரையும் காப்பாற்றுகிறார்கள். அந்த நேரத்தில் பாரதி மட்டும் வரவில்லை என்பதால் அவரை தேடி செல்கிறார் கண்ணம்மா.

அவரை ஒரு அறையில் கட்டி தொங்கவிட்டு இருக்கின்றனர். கண்ணம்மாவை வர வேண்டாம் என அவர் தடுக்கிறார். அதற்கு காரணம் அவர் உடலில் டைம்பாம் இருந்தது தான்.

ஆனால் கண்ணம்மா அவர் விட்டு செல்லாமல் அவரை கட்டிபிடித்து கொள்கிறார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்துவிட்டால் இந்த வாரத்தோடு சீரியல் முடிந்துவிடுமா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Bharathi Kanamma serial
Bharathi Kanamma serial

Similar Posts