(56 மணித்தியாலத்திற்கொரு மாத்திரை) Dr56 திரைவிமர்சனம்…!(Dr56 review)

ஒரு நோயைக் குணப்படுத்தும் மருந்து நடைமுறைக்கு வரும் முன், அந்த மருந்துகள் மனிதன் மீது பயிற்சி சோதனை நடத்தப்படும், அவ்வாறு நடத்தப்படும் சோதனை சாதனையாக முடிந்தால் நலம். அதுவே சோதனையாக முடிந்து பலருக்கும் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்ற சம்பவத்தைத் தான் மையமாகக் கொண்டு இயக்குனர் ராஜேஷ் ஆனந்த்லீலா உருவாகிய திரைப்படம் Dr 56 கதையை பார்க்கலாமா…
படக்குழு

இயக்கம்:
ராஜேஷ் ஆனந்த்லீலா
தயாரிப்பு:
பிரவீன் ரெட்டி டி
வெளியீடு:
ஹரி ஹரா பிக்சர்ஸ்
முக்கிய கதாபாத்திரங்கள்:
பிரியாமணி, பிரவீன், தீபக் ராஜ் ஷெட்டி, ரமேஷ் பட்
இசை:
நோபின் பால்
படத்தின் கதை
பெங்களுருவில் உள்ள ஜெயநகரில் #56 என்ற இடத்தில் மழை பொழியும் அந்த இரவில், தனது முகத்தை மறைத்து வந்த அந்த நபர், தனது நாயோடு ட்ரை சைக்கிளில் வந்து ஒரு பிணத்தை சாலை ஓரம் வீசி விட்டுச் செல்கிறார். இந்த வழக்கை விசாரிக்க, சிபிஐ அதிகாரி ப்ரியாமணி வருகிறார்.

அதன்பிறகு தான் தெரிகிறது இறந்து போனது ஒரு பெண் மருத்துவர் என்று. யார் அந்த கொலை செய்திருக்கிறார் என்று விசாரித்துக் கொண்டிருக்கும் போது, அதற்கு அடுத்தநாள் மற்றொரு ஆண் மருத்துவரும் கொலை செய்யப்பட்டு வீசப்படுகிறார்.
இது பெரும் தலைவலியாக வர, தொடர்ந்து தனது விசாரணையை தீவிரப்படுத்துகிறார் ப்ரியாமணி.
இது ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க, ஒரு பக்கம் முழுவதுமாக எரிந்த நிலையில் வருகிறார் கதையின் நாயகன் பிரவீன் ரெட்டி. ஒருவகையான நோயால் பாதிக்கப்பட்ட இவர், 56 நிமிடத்திற்கு ஒரு மாத்திரை எடுத்தால் மட்டுமே இவரால் உயிர் வாழ முடியும் என்ற சூழல்.
இச்சூழலில், தொடர்ந்து நடைபெறும் கொலைகளை பிரவீன் ரெட்டி தான் செய்கிறார் என்று கண்டறிகிறார் ப்ரியாமணி. இவர் கைது செய்யப்படும் அதேவேளையில், மற்றொரு மருத்துவரும் கொலை செய்யப்படுகிறார்.
இறுதியாக யார் இந்த PR.? மருத்துவர்களை கொலை செய்து வரும் அந்த மர்ம நபர் யார்.?? எதற்காக இந்த கொலைகள் நடைபெறுகிறது..??? என்பது மீதிக் கதை.

திறமையின் தேடல்
சி பி ஐ அதிகாரியாக மிடுக்காக வந்து தனது காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் நாயகி ப்ரியாமணி. அடுத்தடுத்த கட்டத்துக்கு செல்லும் காட்சிகள் சிறப்பு.. நாயகன் PR ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். ஒளிப்பதிவிலும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
ராஜ் தீபக் ஷெட்டி வில்லனாக நடிக்கிறார். அவருடைய டயலாக் டெலிவரியும், உடல் மொழியும் அபாரம். மஞ்சுநாத் ஹெக்டே அவரது ஒரே மகனின் அஸ்தியைப் பெறும் அக்கறையுள்ள தந்தையாக அவரது நடிப்பு பாராட்டுக்குரியது. ரமேஷ் பட் மற்றும் வீணா பொன்னப்பா, நடிகர் யதிராஜ் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
சரியான மூலக் கதையை கையில் எடுத்த இயக்குனர், அதை சொல்லும் விதத்தில் சற்று சறுக்கியிருக்கிறார். திரைக்கதையின் ஓட்டத்தில் சற்று கூடுதலாகவே கவனம் செலுத்தியிருக்கிறார்.

Human Experiement என்ற முக்கியமான விஷயத்தை கையில் எடுத்து அதை படமாக்கியிருக்கிறார் இயக்குனர். அதற்காக இயக்குனருக்கு ஒரு கைதட்டல் கொடுக்கலாம்.
மற்றும் சேத்தன் நாயக். ஒளிப்பதிவாளர் ராஜேஷ் சி திலக் கேமராவுக்குப் பின்னால் நேர்த்தியாகச் செய்திருக்கிறார்.
நோபின் பாலின் இசையில், பாடல்கள் ஓகே ரகம்… பின்னணி இசையில் பெரிதான ஒரு ஈர்ப்பை கொடுக்கவில்லை.
படத்தின் சிறப்பு
புதிய கதை
முதல் பாதி சஸ்பென்ஸ்,
ராகேஷ் திலக்கின் ஒளிப்பதிவு,
நோபில் பாலின் பின்னணி இசை
படத்தின் சொதப்பல்கள்
இசை
இரண்டாம் பாதி சற்று சலிப்பு,
திரைக்கதையில் சறுக்கல்

மதிப்பீடு: 2.8/5
ஆக்ஷன் த்ரில்லருக்கு ஆசைப்பட்டால் இந்தப் படத்தைப் பாருங்கள். DR 56 என்பது மிகவும் சுவாரஸ்யமான கொலை மர்மமாகும், இது அந்த வகையின் விசுவாசிகள் மத்தியில் வரவேற்பைப் பெறும்.
ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.