DSP பட திரைவிமர்சனம்..!(DSP Movie review)

ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை கலந்த பாணியில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான திரைப்படம் DSP.
படக்குழு

இயக்கம்:
பொன்ராம்
தயாரிப்பு:
கார்த்திகேயன் சந்தானம், கார்த்திக் சுப்பராஜ்
வெளியீடு:
ஸ்டோன் பென்ஞ்ச்
முக்கிய கதாபாத்திரங்கள்:
விஜய் சேதுபதி, அனுக்ரீத்தி வாஸ்,புகழ், ஷிவாணி நாராயணன், இளவரசு, ஞானசம்பந்தம், தீபா சங்கர்,சிங்கம் புலி ,ஆதிரா பாண்டிலட்சுமி,பிரபாகர்
இசை:
டி. இம்மான்
படத்தின் கதை
கொலை கொள்ளை ஆல் கடத்தல் என திண்டுக்கல்லை ஆட்டம் காண வைத்துக்கொண்டிருக்கும் ஒரு வில்லன் குடும்பத்திற்கும் சிறுவயது சிறுவன் ஒருவன் உள்ள ஒரு குடும்பத்திற்கும் ஒரு பிரச்சனையில் அந்த சிறுவனின் குடும்பம் ஊரை விட்டு வெளியேற்றப்படுகிறது.
அந்த சிறுவன் தனது ஊரில் தலை நிமிர்ந்து நடக்க தனது சொந்த ஊரில் தலை காட்ட நன்றாக படித்து பெரிய பொலீஸ் அதிகாரியாக மாறுகிறார். அதாவது டி எஸ் பி வாஸ்கொடகாமா. அவர் தான் கதாநாயகன் விஜய் சேதுபதி, அவர் தனது சொந்த ஊருக்கே பணியின் நிமித்தம் செல்ல நேருகிறது.

அவரின் தந்தை அந்த ஊரில் ஒரு ரவுடியும் இருக்க கூடாது என்று சொன்னதிற்காக அனைத்து ரவுடிகளையும் அடித்து துவம்சம் செய்கிறார். அது மட்டுமன்றி தன்னை துரத்திய ரவுடியுடனே மோதல் ஏற்படுகிறது. இதற்கிடையில் கதாநாயகியுடன் காதலும் ஏற்படுகிறது.
அது மாட்டுமன்றி தனது தங்கையை நன்றாக வைத்திருக்க வேண்டும். அவருக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற கடமையும் அவரை சாருகிறது. தனது தங்கை மேல் அளவு கடந்த பாசமும் வைத்திருக்கிறார். இதனால் அவரின் தங்கைக்கு நல்ல மாப்பிள்ளையும் தேடுகிறார்.

அப்போது வரும் சிக்கல்கள் என்ன? கதாநாயகியை திருமணம் செய்தாரா? தன்னை துரத்திய வில்லனை என்ன செய்தார்? தங்கைக்கு திருமணம் நடந்ததா என்பதே மீதிக் கதையாகும்.
திறமையின் தேடல்
நடிகர் விஜய்சேதுபதி அவரது கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் மட்டுமே நடித்திருக்கிறார். மற்றும்படி சொல்ல எதுவுமில்லை அதே நடிப்பு தான். முயற்சி செய்துள்ளார் ஆனால் முடியவில்லை. காமெடிகள் நன்றாக பண்ணியுள்ளார்.
கதாநாயகி அவரும் அதே நடிப்பு திறமையை காட்டியுள்ளார். பொலிஸ் செட்டில் உள்ள ஷிவானி போன்றோர் நல்லா நடித்துள்ளனர்.
புகழ் ஏதோ காமெடி என்ற பெயரில் பண்ணியிருக்கிறார். ஆனால் சில இடங்களில் ரசிக்க கூடியதாக உள்ளது.
இயக்குனர் பழைய கதைகளுக்கு புதியதை புகுத்தி படம் எடுக்க முயற்சி செய்துள்ளார்.
டி இமானின் பிண்ணனி இசை செம்ம , சினிமிடோ கிராபி நன்றாக உள்ளது. அதுவே பக்க பலம்

படத்தின் சிறப்பு
டி இமானின் பிண்ணனி இசை
சினிமிடோ கிராபி மற்றும் எடிட்டிங்
வழமையான நடிப்புகள்
படத்தின் சொதப்பல்கள்
காமெடிகள் சகிக்கவில்லை,
சுவாரஷ்யங்கள் குறைவு,
பழைய கதைதான்,

மதிப்பீடு: 2.5/5
2கே கிட்ஸ் மற்றும் 90கிட்ஸ் க்கு பெரிதாக பிடிக்க வாய்ப்பிலை தான் என்றாலும் குடும்பமாக பார்க்கலாம். புதிதாக எதுவும் இல்லை.
ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.