செய்திகள்

நூல் இழையில் உயிர்தப்பிய நடிகரின் பரபரப்பு பதிவு!

நிதியின் சத்யா ஆரவ், நடிப்பில் வெளியான ‘மார்க்கெட் ராஜா எம் பி பி எஸ்’ படத்தில் நடித்திருந்தார். நடிப்பை தாண்டி ‘ஜருகண்டி’, ‘லாக்கப்’ போன்ற படங்களை தயாரித்தும் உள்ளார்.

இந்நிலையில் அனைவரும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

கன மழை பெய்ததில்,சாலைகளில் இருந்த மரங்கள் சாய்ந்து விழுந்தன. இப்படிதான் நதிடீரென யாரும் எதிர்பார்க்காத நேரம், பெரிய மரம் ஒன்று சாய்ந்து விழுந்துள்ளது.

மரம் விழுந்த இடத்தில் நடிகர் நிதின் சத்யா இருந்ததாகவும், அவர் நூல் இழையில் அந்த விபத்திலிருந்து தப்பியதாக சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். எனவே மழை பெய்யும் காலங்களில் சென்னை மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் பாதுகாப்பாக பயணம் செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளார்.

Similar Posts