வெற்றிமாறனுடன் விடுதலை படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பிரபல இயக்குனர் சுதா கொங்கரா | Famous director Sudha Kongara on the sets of Viduthalai with Vetri Maaran
தமிழ் சினிமாவில் தொடர் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். தற்போது இவர் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் விடுதலை திரைப்படம் உருவாகியுள்ளது.

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி, கவுதம் மேனன் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

சமீபத்தில் விடுதலை படத்தின் ட்ரைலர் வெளியானது. இதற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இப்படம் வருகின்ற 31 -ம் தேதி வெளியாகவுள்ளது.

விடுதலை படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பின் போது இயக்குனர் வெற்றிமாறனுடன் இயக்குனர் சுதா கொங்கரா எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
அங்கு அவர் வெற்றிமாறனுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவரின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.