ரஜினியை அவதூறாக பேசியதால் வடிவுக்கரசியை வளைத்து பிடித்த ரசிகர்கள்…!
குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கியுள்ளவர் வடிவுக்கரசி. அண்மையில் வெளியான ‘விருமன்’ படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது.
இந்நிலையில் இவர் பேட்டியில் , ரஜினியின் ‘அருணாச்சலம்’ படம் கூன் விழுந்த வயதான பாட்டி கேரக்டரில் நடித்து அசத்தியிருப்பார். இந்தப்படத்தில் ரஜினியை பார்த்து, “அனாதை நாயே வெளியே போ” என்னும் வசனத்தை ஆக்ரோஷம் பொங்க பேசியிருப்பார் வடிவுக்கரசி.
இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் இவர் சென்ற ரயிலை வழிமறித்து மன்னிப்பு கேட்காவிட்டால் எழுந்திருக்க மாட்டோம் என தண்டவாளத்தில் படுத்து விட்டார்களாம்.
இந்த நிகழ்வை தற்போது பேட்டியில் பகிர்ந்துள்ளார் வடிவுக்கரசி.மேலும், தான் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்ட கார்த்தியுடன் நடித்து விட்டதாகவும், அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார்.