நயன் – விக்கி தம்பதியினருக்கு பிரியாணி பார்சல்களை அனுப்பி வைத்த ரசிகர்கள். | Fans send biryani parcels to Nayan-Vicky couple.
நாடு முழுவதும் நேற்று இஸ்லாம் மக்களால் ஈகைப் பெருநாள் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனையடுத்து ஈகைப் பெருநாள் கொண்டாடிய இஸ்லாமியர்களுக்கு பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில் நயன் – விக்கி தம்பதியினருக்கு அவர்களது நண்பர்களும் ரசிகர்களும் பிரியாணி அனுப்பி வைத்து தங்களுடைய அன்பை வெளிப்படுத்தியுள்ளனர். இது குறித்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு “அன்பால் தானாய் சேர்ந்த பிரியாணி” என பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

