அஜித்தின் துணிவு படத்திற்காக அய்யப்பனிடம் வேண்டிய ரசிகர்கள்..!(Fans want Ayyappan for Ajith’s Thunivu)
நடிகர் அஜித் தற்போது துணிவு என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் அஜித் நடிப்பில் வெளியாக உள்ள துணிவு படம் வெற்றி பெற வேண்டும் என்று வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் சிலர் துணிவு படத்தின் போஸ்டர் உடன் சபரிமலையில் வேண்டுதல் வைத்துள்ளனர்.
அந்த போஸ்டரில் ”துணிவு படம் வெற்றி பெற வேண்டுகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
