ஃபர்ஹானா திரைப்படத்தின் திரைவிமர்சனம் | Farhana Movie Review

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஹீரோயின் சென்ரிக் படமாக உருவாகியுள்ள ‘ஃபர்ஹானா’ திரைப்படம் எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம்.
படக்குழு
இயக்கம்:
நெல்சன் வெங்கடேசன்
தயாரிப்பு:
எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு
வெளியீடு:
எஸ்.எம். சிராஜுதீன், ராஜாராமன்
முக்கிய கதாபாத்திரங்கள்:
ஐஸ்வர்யா ராஜேஷ், செல்வராகவன், ஐஸ்வர்யா தத்தா, ஜித்தன் ரமேஷ், அனுமோல்
இசை:
ஜஸ்டின் பிரபாகரன்
படத்தின் கதை
இஸ்லாமிய குடும்பப் பின்னணியைக் கொண்ட நாயகியை மையப்படுத்தி அமைந்திருக்கின்றது. கட்டுக்கோப்பான இஸ்லாமிய தந்தை, அன்பான கணவர், மூன்று குழந்தைகளை கொண்டு, ஐந்து வேளை தொழுகை உடன் கூடுதலாக ஆறாவது வேளை தொழுகை செய்து வாழும் சராசரி இஸ்லாமிய குடும்பப் பெண் ‘ஃபர்ஹானா’ ஐஸ்வர்யா ராஜேஷ். படித்த பெண்ணான ஃபர்ஹானா, குழந்தைகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட முடியாமல், மருத்துவ செலவை ஏற்க முடியாமல் திணறும் குடும்பத்துக்கு உதவ நினைத்து குடும்பத்தாரிடம் அனுமதி பெற்று கால் சென்டரில் வேலைக்கு சேர்கிறார். குழந்தையின் உடல் நலம் பாதிக்கப்பட்ட கவலையில் இருக்கும் ஃபர்ஹானாவுக்கு அதே நிறுவனத்தின் வேறு பிரிவில் சேர்ந்தால் கூடுதல் பணம் கிடைக்கும் என்பது தெரிய வருகிறது. இதையடுத்து அந்த பிரிவுக்கு மாறுகிறார்.

மாற்றப்பட்ட பின்னர் தான் அவருக்குத் தெரிய வருகிறது அது பிரென்ஷிப் கால் எனப்படும் நட்புலக கால் சேவை.அதாவது தனியாக உணர்பவர்கள் முகம் தெரியாத எதிரில் இருப்பவர்களிடம் பெரும்பான்மை உரையாடலில் ஆபாசத்தை அள்ளி வீச, அங்கு கனிவான தன் குரலின் உணர்வறிந்து பேசும் மற்றோரு குரலை சந்திக்கிறார். அந்த நபர் ஃபர்ஹானாவின் ரெகுலர் அழைப்பாக மாற ஒரு கட்டத்தில் ஃபர்ஹானாவின் குடும்ப பின்னணி, நிறுவன விதிகளை மீறி அவர்கள் இருவரும் சந்திக்க முடிவு எடுப்பதால் பிரச்சனை ஏற்படுகிறது.

ஆனால் பின்னர் தொடர்ந்து நிகழும் ஒரு அசம்பாவித சம்பவத்தால் தன்நிலை உணர்ந்து தன் முடிவை மாற்றிக் கொண்டு தன் பணியை தொடர்கிறார் ஃபர்ஹானா. இதனிடையே போனில் பேசிய அந்த நபரை ஃபர்ஹானா நேரில் சந்தித்தாரா? கணவர், குடும்பம் என பலகட்ட சிக்கல்களை தாண்டி வேலைக்கு வந்த ஃபர்ஹானாவின் நிலை பின்னர் என்ன ஆனது? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
படத்தின் சிறப்பு
ஃபர்ஹானா வாக ஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பு மிகச் சிறப்பாக இருக்கிறது.
ஃபர்ஹானாவின் பிரச்சனைகள், குழப்பங்களை சஸ்பென்ஸுடன் அழகாக கொடுத்திருக்கிறார் நெல்சன்.
ஃபர்ஹானாவின் கணவராக வரும் ஜித்தன் ரமேஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜஸ்டின் பிரபாகரனின் இசை படத்திற்கு பெரிய பிளஸ் பாயிண்டாக அமைந்திருக்கிறது.
நடிகராக செல்வராகவன் மிரட்டியிருக்கிறார்.
மனுஷ்யபுத்திரன் – சங்கர் தாஸ் – நெல்சன் கூட்டணியில் வசனங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கின்றன.
படத்தின் சொதப்பல்கள்
முதல் பாதிக்கு நேர் எதிரே பயணிக்கும் இரண்டாம் பாதி இரு வேறு படங்களை பார்க்கும் உணர்வைத்தருகிறது.
மதிப்பீடு: 3.25/5
நீண்ட நாட்களுக்குப் பிறகு, இஸ்லாமிய வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டு திறம்பட தமிழ்த் திரைப்படம் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.