செய்திகள்

கௌதமி தனது மகளுடன் மாடர்ன் உடையில் | Gautami dressed in modern clothes along with her daughter

கடந்த 1988-ம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த குரு சிஷ்யன் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் கௌதமி. தொடர்ந்து கமல் ரஜினி எனப் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கின்றார்.

Gautami

கெளதமி கடந்த 1998-ம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த 1999-ம் ஆண்டு சுப்புலட்சுமி என்கிற பெண் குழந்தையும் பிறந்தது. அந்த ஆண்டே தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார் கெளதமி.
கௌதமி தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.

Gautami

இந்நிலையில், நடிகை கெளதமி தற்போது தனது மகளுடன் இணைந்து நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள், 54 வயதிலும் நடிகை கெளதமி அழகில் தனது மகளுக்கே டஃப் கொடுப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். நடிகை கெளதமியின் இந்த மாடர்ன் லுக் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகின்றது.

Similar Posts