குட் நைட் திரைப்படத்தின் திரைவிமர்சனம் | Good Night Movie Review

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன், மீதா, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், ரேச்சல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இன்று வெளிவந்துள்ள குட் நைட் திரைப்படம் எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம்.
படக்குழு
இயக்கம்:
விநாயக் சந்திரசேகரன்
தயாரிப்பு:
மகேஷ் ராஜ் பசிலியன், யுவராஜ் கணேசன், நசரத் பாசிலியன்
வெளியீடு:
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட்
முக்கிய கதாபாத்திரங்கள்:
மணிகண்டன், மீதா, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், ரேச்சல்
இசை:
சீன் ரோல்டன்
படத்தின் கதை
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மணிகண்டன் ( மோகன் ) குறட்டை பிரச்சனையால் அலுவலகம் நண்பர்கள் என அனைவரிடமும் பல தடவை அவமானப்படுகிறார். இதனால் அவரது காதலியும் அவரைப் பிரிந்து சென்றுவிட விரக்தியின் உச்சத்திற்கு செல்கிறார். மற்றொரு புறம் கதாநாயகி மீதா, தன்னை ஒரு துரதிஷ்டசாலி என நினைத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார். இவர் குடியிருக்கும் வாடகை வீட்டின் உரிமையாளர்கள் பாலாஜி சக்திவேல் மற்றும் அவருடைய மனைவி தான் மீதாவை பார்த்துக்கொள்கிறார்கள்.

இப்படி இருக்கும்போது கதாநாயகி மீதாவை சந்திக்கும் மணிகண்டன் அவர் மீது காதலில் விழுகிறார். அதன் பின் குடும்பத்தார் அனைவரும் கலந்துபேசி இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால் அவர்களின் முதலிரவில் தான் மணிகண்டனுக்கு குறட்டை பிரச்சனை இருக்கிறது என்ற விஷயம் அனுவுக்கு தெரிய வருகிறது. இதனால் என்ன நடக்கிறது? ஹீரோ தன்னுடைய குறட்டை பிரச்சனையை சமாளிக்க என்னவெல்லாம் செய்கிறான்? ஹீரோயின் இதனை எவ்வாறு கையாள்கிறாள்? என்பது தான் படத்தினுடைய மீதிக்கதை.
படத்தின் சிறப்பு
கதாநாயகன் மணிகண்டன் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
ஹீரோவிற்கு எந்த விதத்திலும் குறையாத நடிப்பை கதாநாயகி மீதா சிறப்பாக கொடுத்துள்ளார்.
இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் எடுத்துக் கொண்ட கதைக்களம் புதுமை.
நகைச்சுவையான திரைக்கதை ஓட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், வலிகளை சுமந்து செல்லும் திரைக்கதையை எதார்த்ததுடன் வடிவமைத்துள்ளார் இயக்குனர்.
எடிட்டிங், பின்னணி இசை, ஒளிப்பதிவு.
படத்தின் சொதப்பல்கள்
சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய குறைகள் ஒன்றும் இல்லை.
மதிப்பீடு: 3.25/5
குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக் கூடிய படமாக இந்த ‘குட் நைட்’ அமைந்துள்ளது
ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.