செய்திகள்

ஹேம்நாத் மிரட்டவில்லையாம், நடிகை சித்ராவின் கொலை திருப்பம்..! (Hemnath did not threaten, actress Chitra’s murder turn)

சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய புகாரில் ஹேம்நாத்தை காவல்துறை கைது செய்தனர்.

பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், ஹேம்நாத்தின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி அவரது நண்பர் சையத் ரோஹித் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அப்போது, ஹேம்நாத் தனது நண்பர் சையத் ரோஹித்தை மிரட்டியாதாக கொடுக்கப்பட்ட புகாரை விசாரித்தில் அது உண்மை இல்லை என தெரிய வந்ததால், புகார் முடித்து வைக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

actress Chitra

அதேபோல், சையத் ரோகித்தை மிரட்ட மாட்டேன் என ஹேம்நாத் தரப்பிலும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

Similar Posts