செய்திகள் | திரைப்படங்கள்

இந்த வார இறுதியில் உங்களை மகிழ்விக்க தயாராக இருக்கும் திரைப்படங்களின் பெயர்கள் இதோ. | Here are the names of the movies that are ready to entertain you this weekend.

கஸ்டடி : வெங்கட்பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள படம் கஸ்டடி. இதில்,அரவிந்த் சாமி, ப்ரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா, யுவன்சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் மே12ந் தேதி இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் மூலம் நாக சைதன்யான கோலிவுட்டில் தனது அறிமுகத்தை கொடுக்கிறார்.

Here are the names of the movies that are ready to entertain you this weekend.

பீட்சா 3 மம்மி : விஜய்சேதுபதி நடித்த பீட்சா படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று, சினிமாவில் அவருக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது. அப்படம் வெற்றி பெற்றதை அடுத்து இரண்டாம் பாகமும் வெளியானது. தற்போது பீட்சா 3-ம் பாகம் பீட்சா 3 மம்மி’ என்ற பெயரில் தயாராகி உள்ளது. இதில் அஸ்வின் காக்குமனு, பவித்ரா மாரிமுத்து, கவுரவ் நாராயணன், காளி வெங்கட், குரேஷி, அனுபமா, அபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், கன்னடம், இந்தி,தெலுங்கில் மே12ந் தேதி வெளியாக உள்ளது.

Here are the names of the movies that are ready to entertain you this weekend.

இராவண கோட்டம் : விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இராவண கோட்டம். இதில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி உள்ள ,இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படம் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.

Here are the names of the movies that are ready to entertain you this weekend.

ஃபர்ஹானா : நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் லீட்ரோலில் நடித்துள்ள படம் ஃபர்ஹானா. இதில் இயக்குநர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் 12ந்தேதி வெளியாக உள்ளது.

குட் நைட் : பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் ராசாக்கண்ணு என்ற கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டன் தற்போது, விநாயக் சந்திரசேகர் இயக்கி உள்ள குட் நைட் படத்தில் நடித்தார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இப்படம் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.

Similar Posts