செய்திகள்

ஹீரோயினுக்கு மதிப்பில்லை.போஸ்டரில் கூட வருவதில்லை..கொந்தளித்த தமன்..!

நடிகை தமன்னா ஒரு கட்டத்தில் கொடி கட்டி பறந்தவர் அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள். இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது பெண்களுக்கு மதிப்பில்லை எண்றார்.

“யாரும் பெண்களை சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை. நான் பணியாற்றும் படங்களில் நான் எதாவது கருத்து கூறினால், அது சரியா என என்னையே இன்னொரு முறை யோசிக்க வைப்பார்கள். சில நேரங்களில் நான் கோபமாக என் ஒபினியனை சொன்னால் தான் எடுத்துக்கொள்வார்கள்.”

“ஒரு காலத்தில் நான் ஹீரோவின் love interest ரோல்களில் நடித்து எனக்கே போர் அடித்துவிட்டது. தற்போது எனக்கு பல விதமான கேரக்டர்கள் வருகிறது, இப்போது நிலைமை எவ்வளவோ பரவாயில்லை” என கூறி இருக்கிறார்.

இரண்டு pan India படங்களில் நடித்தேன். சம்பளம் கூட பேசி வேண்டிடலாம் ஆனால் போஸ்டரில் போட்டோ வருவது தான் கடினம். அதேபோல் ஆண் நண்பர்கள் ப்ரமோஷனுக்கு வரவில்லை என்றால் ஒன்றுமில்லை ஆனால் நான் போகாவிட்டால் . எனக்கும் தயாரிப்பாளருக்கும் பிரச்சனை என செய்தி வரும்” என தமன்னா கோபமாக கூறி இருக்கிறார்.

மேலும் ஹீரோவுக்கு மட்டும் அதிக சம்பளம் ஆனால் ஹீரோயின்களுக்கு சம்பளம் மிக மிக குறைவு எனவும் தெரிவித்தார்.

Similar Posts