செய்திகள் | சின்னத்திரை

தொகுப்பாளினி அர்ச்சனாவின் மகள் சாராவின் உணர்ச்சிகரமான பதிவு | Host Archana’s daughter Zaara’s emotional post ‘தொழிலில் 23 ஆண்டுகள் சிறந்து விளங்குகிறது எளிதான சாதனை அல்ல’

சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தார் அர்ச்சனா .அந்த நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகர் சிட்டிபாபு உடன் இணைந்து தனது தொகுப்பாளர் பணியை தொடர்ந்து அர்ச்சனா, அதன் பின்னர் ஸ்வர்ணமால்யா விட்டுச்சென்ற ‘இளமை புதுமை’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தனக்னெ ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டார்.

இதனைத் தொடர்ந்து தனது தொகுப்பாளினி பணியை செய்து வந்த அர்ச்சனா. கடந்த 2004 ஆம் ஆண்டு வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதன் பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ச ரி க ம ‘ ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளினியாக களமிறங்கினார் அர்ச்சனா.

அர்ச்சனாவும் அவரது மகளும் சேர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் மாம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதற்கு பெரும் ரசிகர் பட்டாளமே உருவாகியது.

Host Archana’s daughter Zaara’s emotional post

இதன்பின் விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் வலம் வந்த அர்ச்சனா, மீண்டும் ஜீ தமிழுக்கே சூப்பர் மாம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சென்றுவிட்டார். இந்த நிகழ்ச்சியை தனது மகள் சாராவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார் அர்ச்சனா.

இந்த நிலையில் அர்ச்சனா 23 ஆண்டுகள் தொகுப்பாளராக சாதனை படைத்துள்ளார். இதை முன்னிட்டு அம்மாவுக்காக மகள் சாரா ஒரு உணர்ச்சிகரமான பதிவை பதிவிட்டுள்ளார்.

Host Archana’s daughter Zaara’s emotional post

அதாவது

தொழிலில் ஒரு தொகுப்பாளர், தற்செயலாக நடிகர், விருப்பத்தால் தாய், ஒரு வானொலி கலைஞர், ஒரு பாட்காஸ்டர், ஒரு யூடியூபர், ஒரு செல்வாக்கு செலுத்துபவர், ஒரு உள்ளடக்கத்தை உருவாக்குபவர், ஒரு மனைவி, ஒரு சகோதரி, ஒரு வழிகாட்டி, ஒரு சமையல்காரர் (மன்னிக்கவும் கடவுளே).

Host Archana’s daughter Zaara’s emotional post

ஊடகத்தின் ஒவ்வொரு துறையையும் ஆராய்ந்து விட்டீர்கள்.
1999 இல் ஆங்கில செய்தி வாசிப்பாளராக உங்கள் வாழ்க்கையைத் தொடங்கினீர்கள். ஊடகங்களில் மிகச்சிறந்த தொகுப்பாளராக மாறியது மற்றும் இளமை புதுமை மற்றும் நகைச்சுவை நேரம் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நீங்கள் சன் டிவி மற்றும் விஜய் டிவியில் இருந்த காலத்தில் உங்கள் வாழ்க்கையில் ஒரு அற்புதமான உச்சத்தை அடைந்தீர்கள்!

Host Archana’s daughter Zaara’s emotional post

2015 இல் ஜீ தமிழில் அடியெடுத்து வைத்த நீங்கள், அதிஷ்டலட்சுமியை தொகுத்து வழங்கி, அனைவருக்கும் அதிர்ஷ்டத்தை கொண்டு வந்தீர்கள். நீங்கள் பிக்பாஸுக்குச் செல்ல சில முடிவுகளை எடுத்தீர்கள், ஆனால் நீங்கள் ஒரு உண்மையான போர்வீரனைப் போல எல்லாவற்றையும் எதிர்த்துப் போராடினீர்கள்.

அச்சு, கடந்த 3 வருடங்களில் நீங்கள் நம்பமுடியாத வெறுப்பை எதிர்கொண்டுள்ளீர்கள், உங்களை விட வலிமையாக யாரும் அதை எதிர்கொண்டிருக்க முடியாது. எனக்கு தெரிந்த யாராலும் உன்னை விட வலிமையாக போராட முடியாது. நீங்கள் தினமும் என்னை பெருமைப்படுத்துகிறீர்கள்.

கடந்த 23 வருடங்களில் நீங்கள் தினமும் உச்சத்தில் இருக்கிறீர்கள். உங்களுடன் பல துறைகளை கைப்பற்ற காத்திருக்க முடியாது. நான் உன்னை பைத்தியம் போல் நேசிக்கிறேன் 🫶🏻என பதிவிட்டுள்ளார்.

Similar Posts