செய்திகள் | கலை காட்சி கூடம்

பூங்குழலியாக மாறிய தொகுப்பாளினி ரம்யா சுப்ரமணியம். | Host Ramya Subramanian turned intoa Poonguzhali.

நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, விக்ரம், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள பொன்னியின் செல்வன் 2 நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Host Ramya Subramanian turned intoa Poonguzhali.

சர்வதேச அளவில் வெளியாகியுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மிகுந்த வரவேற்பை கொடுத்துள்ளனர். படத்தின் முதல் பாகம் கொடுத்துள்ள சிறப்பான எதிர்பார்ப்பை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகத்திற்கான பிரமோஷன்களும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் படத்தின் பூங்குழலி கேரக்டரை தனக்குள் கொண்டுவந்துள்ளார் பிரபல விஜே ரம்யா சுப்ரமணியன். பொன்னியின் செல்வனை நான் முதன்முதலில் வாசித்தபோது, ‘பூங்குழலி’தான் என்னுடன் உடனடியாக இணைந்தது. அவளில் என்னைப் பார்த்தேன்.

கடல்களை ஆளவும், அலைகளை அடக்கவும், கப்பலோட்டவும் பிறந்த நம் ‘சமுத்திர குமாரி’க்கு இது எனது அஞ்சலி! என்று குறிப்பிட்டு சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

Similar Posts