புகழின் உச்சிக்கு சென்றாலும் எவ்வளவு எளிமையாக இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான் | How simple is AR Rahman despite reaching the top of fame?
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படம் உருவாகியிருக்கிறது. ராமிடம் உதவி இயக்குநராக இருந்த மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். முதல் படத்திலேயே சென்சிட்டிவான சாதியத்தை கையில் எடுத்து அதை மிக பக்குவமாக காட்சிப்படுத்தி விருந்து படைத்தவர். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அடுத்ததாக இயக்கிய கர்ணன் திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸ் திரைப்படமாக அமைந்தது. இப்போது மாமன்னனை எடுத்திருக்கிறார்.

இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜை தனது எளிமை மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் ஆச்சரியப்படுத்தியதாக தகவல் வெளியானது. அதாவது, மாரி செல்வராஜிடம் ஏ.ஆர்.ரஹ்மான், நான் படத்தை பார்க்க வேண்டும். அப்போதுதான் அதற்கு ஏற்றவாறு என்னால் இசையமைக்க முடியும் என கூறியிருக்கிறார். அதற்கு மாரி செல்வராஜ், வேறு ஒரு படப்பிடிப்புக்காக திருநெல்வேலியில் இருக்கிறேன். சென்னையில் பார்க்க ஏற்பாடு செய்கிறேன் என்றிருக்கிறார்.

அதற்கு ஏ.ஆர்.ரஹ்மானோ இல்லை இந்தப் படத்தை உங்களுடந்தான் நான் பார்க்க வேண்டும். என ஸ்ட்ரிக்ட்டாக கூறீவிட்டாராம். இதனையடுத்து ஏ.ஆர்.ரஹ்மானை திருநெல்வேலிக்கு வரவழைத்து இருவரும் சேர்ந்து ஒன்றாக மாமன்னன் படத்தை பார்த்தனராம். அன்றைய தினம் முழுவதும் மாரி செல்வராஜுடன் இருந்து படம் குறித்து நிறைய விஷயங்களை பேசிவிட்டு மறுநாள் சென்னைக்கு கிளம்பியிருக்கிறர் ரஹ்மான். இந்தத் தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் புகழின் உச்சிக்கு சென்றாலும் எவ்வளவு எளிமையாக ஏ.ஆர்.ரஹ்மான் இருந்திருக்கிறார் என பாராட்டி வருகின்றனர்.