செய்திகள்

அவர் மிரட்டலிலே நான் பயந்து நடித்தேன்…தனுஷ் உருக்கம்..!

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவில் ஏழாவது மனிதன் படத்தின் என்ட்ரி கொடுத்தார். 1980களில் ஏராளமான படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் ரகுவரன்.

ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும் பட்டையை கிளப்பிய ரகுவரன் வில்லனாகவும் மிரட்டி முத்திரை பதித்துள்ளார். ஒவ்வொரு படத்திலும் அவருடைய கதாப்பாத்திரமும் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது.

யாரடி நீ மோகினி படத்தில் தனுஷுக்கு அப்பாவாக நடித்திருந்தார் ரகுவரன். ரகுவரன் மரணமடைந்து 15 நாட்கள் கழித்து இந்தப் படம் வெளியானது.

அதில் ரகுவரனுடன் ஒரே ஃபிரேமில் நடித்தது பெரும் சவாலாக இருந்ததாக கூறியுள்ளார் தனுஷ். ரகுவரன் நடிப்பில் மிரட்டுவார் என்பதால் ரொம்பவே சிரமப்பட்டு நடித்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அந்த படத்தில் அப்பா மகனாக தங்களுக்குள் கெமிஸ்ட்ரி நன்றாக வொர்க்கவுட் ஆனதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar Posts