செய்திகள்

வெங்கட் மட்டும் இல்லை என்றால் நான் இயக்குனராக இல்லை..!

ரஞ்சித் அட்டகத்தி படத்தின் மூலம் தன் திரைப்பயணத்தை தொடங்கினார். பத்து வருடங்களுக்கும் மேலாக இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வலம்வரும் ரஞ்சித் தற்போது நட்சத்திரம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

ரஞ்சித் முதல் படமான அட்டகத்தியை யாரும் வாங்க முன்வரவில்லையாம். இதை வெங்கட் பிரபுவிடம் சொல்ல, வெங்கட் பிரபு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை படம் பார்க்க அழைத்து வந்தாராம். ஞானவேல் ராஜாவிற்கு அட்டகத்தி படம் மிகவும் பிடித்து போக அவர் அப்படத்தை வாங்கி வெளியிட்டாராம்.

இந்நிலையில் வெங்கட் பிரபு மட்டும் இல்லை என்றால் என் முதல் படம் வெளியாகி இருக்காது என்று பா.ரஞ்சித் சமீபத்திய பேட்டி ஒன்றில் உருக்கமாக பேசியுள்ளார்.

Similar Posts